வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐடியா என்ன, வழக்கமாகக் கொடுக்கும் 1000 க்கு increment கொடுத்து 1500 ஆக்கிவிட்டால் தானே ஓட்டுகள் விழுந்துவிடும் என்ற அலட்சியம் தான் இதுதானே மக்களின் பலவீனம்
மஹாராஷ்டிராவில் செயல்படும்,தேசியவாத காங்., சரத் பவார் அணியின் தலைவர் சரத் பவார்: என்னை, 84 வயது முதியவர் என, கிண்டல் அடிக்கின்றனர்; கவலையில்லை. 84 வயதோ, 90 வயதோ, இந்த மாநிலத்தை சரியான பாதைக்கு திருப்பும் வரை இந்த கிழவன் ஓயமாட்டான். டவுட் தனபாலு: மஹாராஷ்டிராவுல நாலு முறை நீங்க முதல்வரா இருந்திருக்கீங்க... அதன்பின் நடந்த பல கூட்டணி ஆட்சிகள்லயும் உங்க கட்சி பங்கெடுத்திருக்கு... அப்ப எல்லாம்,மாநிலத்தை சரியான பாதைக்கு திருப்ப நீங்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தா, இப்ப இப்படி புலம்ப வேண்டிஇருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணியம்: தமிழகத்தில்,கடவுள் நம்பிக்கை இல்லாதஅரசு நடந்து வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது.2026ல் மாற்றம் வரும்போது, சனாதனம் குறித்து பேசியவர்கள், யோசனை செய்யக்கூடிய சூழல் உருவாகும்.டவுட் தனபாலு: ஹிந்துக்கள் ஓட்டுகளை கவர, 2021 சட்டசபைதேர்தல் நேரத்துல, வேலுடன் ஸ்டாலின் போஸ் கொடுத்தாரே...அந்த மாதிரி, 2026 தேர்தலுக்கும்ஏதாவது ஐடியா வச்சிருப்பாங்க...அதுவும் இல்லாம, நம்ம மக்களுக்குமறதி ரொம்பவும் ஜாஸ்தி என்பதால், சனாதனம் குறித்து பேசியதை எல்லாம் எண்ணி பார்த்து ஓட்டு போடுவாங்களா என்பதும், 'டவுட்'தான்!கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள சூழலில், ரேஷன் கடைகளுக்கு, 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில், 3,473 டன் மட்டுமே சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தி.மு.க., அரசு தன் துாக்கத்தை கலைத்து, அனைவருக்கும் தீபாவளிக்கு முன் துவரம் பருப்பு கிடைப்பதைஉறுதி செய்ய வேண்டும்.டவுட் தனபாலு: தீபாவளி பண்டிகை மீது நம்பிக்கை இல்லாத திராவிட மாடல் ஆட்சிநடக்கிறதால, யார் தீபாவளி கொண்டாடுனா என்ன, கொண்டாடாம போனா என்னன்னு அசால்டா இருந்துட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
ஐடியா என்ன, வழக்கமாகக் கொடுக்கும் 1000 க்கு increment கொடுத்து 1500 ஆக்கிவிட்டால் தானே ஓட்டுகள் விழுந்துவிடும் என்ற அலட்சியம் தான் இதுதானே மக்களின் பலவீனம்