உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: கடந்த 2011ல் வெற்றி பெற்று ஆட்சிக்குவந்த ஜெயலலிதா, 2016லும் வெற்றி பெற்றார்; என்னை போன்றவர்களை அமைச்சர் ஆக்கினார். அவர், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக,உடல்நிலையை பொருட்படுத்தாமல் உழைத்தார். உடல்நிலை சரியில்லை என்றதும், அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தால்,இன்றும் நம்மோடு இருந்துஇருப்பார். தமிழகம் மிக நன்றாக இருந்திருக்கும்.டவுட் தனபாலு: அவரால் பதவி சுகத்தை அனுபவித்த உங்களை போன்றவர்கள், அன்றைக்கு சசிகலாவிடம் போராடி, ஜெ.,யை அமெரிக்காவுக்கு அழைச்சிட்டு போய்இருக்கலாமே... அதை விட்டுட்டு, மருத்துவமனை ரிசப்ஷன் வரைக்கும் போயிட்டு வெளியிலவந்து, 'அம்மா இட்லி சாப்பிட்டாங்க...' என்று, 'அளந்துவிட்டதை' எல்லாம் மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!முன்னாள் முதல்வர் ஜெ.,யின்தோழி சசிகலா: அ.தி.மு.க., ஒன்றிணைவது குறித்து, 2026ல் பாருங்கள். கட்சி ஒன்றுஇணைந்தால், யார் முதல்வராகஇருப்பார் எனக் கேட்கின்றனர்;மக்கள் யாரை விரும்புவரோ, அவர் தான் முதல்வர்.டவுட் தனபாலு: நீங்களும் பல வருஷமா இதையே தான் கிளிப்பிள்ளை மாதிரி சொல்றீங்க... ஆனாலும், உங்களையோ, பன்னீர்செல்வத்தையோ ஒரு காலமும் சேர்க்க மாட்டோம்னு பழனிசாமி திட்டவட்டமா சொல்லிட்டாரே... அதனால, 2026 அல்ல 2036 வந்தாலும், உங்க எண்ணம் ஈடேறுவது, 'டவுட்' தான்!நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கமல், விஜய் ஆகியோர் கட்சி துவங்கிய போது, அவர்களதுரசிகர் மன்றங்கள் மாற்றப்பட்டு,கட்சியாக கட்டமைக்கப்பட்டன.ஆனால், எங்கள் கட்சி கட்டமைப்பு அவ்வாறு அல்ல. நான்கு தேர்தல்களில் தனித்து நின்று தோல்வி அடைந்தாலும் சமரசம் இன்றி, அடுத்த தேர்தல்களிலும் தனித்து நிற்கும் கட்சி, நாம் தமிழர் கட்சி மட்டுமே.டவுட் தனபாலு: இப்பவே, உங்க கட்சியில இருந்து நிறைய நிர்வாகிகள் ஓட்டம் பிடிச்சிட்டு இருக்காங்க... அடுத்தடுத்தும் தனித்து போட்டியிட்டு, அடி வாங்கிட்டே இருந்தா, கடைசியில,'நாம் தமிழர் கட்சி' என்பது, 'நான் தமிழர் கட்சி' என்ற பெயரில் நீங்க மட்டுமே இருக்கிறகட்சியாக சுருங்கிடும் என்பதில்,'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 31, 2024 18:33

அன்று நீங்கள் எல்லாரும் சசியின் அடிவருடிகளாக இருந்துவிட்டு, இன்று யாரோ உங்கள் அம்மாவை இழுத்துப் பிடித்து இங்கேயே வைத்து கொன்றுவிட்டதை போல ஒரு அறிக்கை விடுகிறீர்களே இதை யாரும் நம்ப மாட்டார்கள்


Anantharaman Srinivasan
அக் 31, 2024 13:43

கடைசியில் நாம் தமிழர் கட்சியில் மிஞ்சப்போது சீமானும் கொடியும் மட்டுமே.


புதிய வீடியோ