உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், 13,000 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவு செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின், தினமும் ஒரு, 'டிராமா' போடுகிறார். பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால், 'வாஷிங் மிஷினில்' போட்ட மாதிரி, எல்லாரும் சுத்தமாகி விடுவரா எனவும் கேட்கிறார். செந்தில் பாலாஜியை, அவர் எந்த, 'வாஷிங் மிஷினில்' போட்டு எடுத்தார்? * டவுட் தனபாலு: செந்தில் பாலாஜி மட்டுமா...? அ.தி.மு.க.,வில் இருந்தப்ப, 'ஊழல்வாதிகள்' என, தி.மு.க.,வினரால் விமர்சிக்கப்பட்ட ராஜ கண்ணப்பன், ரகுபதி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சாத்துார் ராமச்சந்திரன்னு பலர் தி.மு.க., வாஷிங் மிஷினில் போட்டு, சுத்தமாக்கப்பட்டிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 'சனாதன எதிர்ப்பை திருமாவளவன் உயர்த்தி பிடிக்கிறாரே; தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க, உறுதுணையாக இருக்கிறாரே' என்பது தான் பா.ஜ., உள்ளிட்ட பலருக்கும் பிரச்னை. நாளையே, 'தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என நான் அறிக்கை வெளியிட்டால், 'ஆஹா, ஓஹோ' என, அவர்கள் மகிழ்ச்சி அடைவர். ஏன் இன்னொரு தீபாவளி போல் கொண்டாடுவர். * டவுட் தனபாலு: 'காங்., - கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எல்லாம் வேஸ்ட்... தி.மு.க., இன்று ஆட்சியில் இருப்பதற்கு காரணமே வி.சி.,க்கள் தான்' என்று அக்கட்சி தலைமைக்கு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது! தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: முதல்வர் ஸ்டாலின் திட்டப்படி, வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பல்வேறு முன்னெடுப்புகளை, தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 'மத்திய அரசின் முன் தமிழகம் தலைகுனியாது' என்ற பிரசாரத்தை, தி.மு.க., துவக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக, 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற பயிற்சி கூட்டம், வரும் 28ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. * டவுட் தனபாலு: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், நீங்க தந்த வாக்குறுதிகளை முழுசா நிறைவேற்றலை... அதனால, தேர்தல் வெற்றி கேள்விக்குறியாகிடுமோ என பயந்து தான், 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், ஓரணியில் தமிழகம்'னு விதவிதமான திட்டங்களை அறிவிக்கிறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
அக் 23, 2025 18:22

ஆண்ட கட்சியிலும் ஊழல் செய்து சேர்க்கலாம் ஆளும் கட்சிக்கு தாவி, அங்கும் நல்ல ‘செழிப்பான’ துறைகளை பிடித்துக்கொண்டு கொழிக்கலாம் இதல்லவோ நல்ல கொள்கைவீர்களுக்கு அழகு’ கோபுரத்தை நான்தான் தாங்குகிறேன்’ என்று அதன்மேலுள்ள பொம்மை பீற்றிக்கொண்டது போலுள்ளது திருமாவின் பேச்சு


KOVAIKARAN
அக் 23, 2025 14:54

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அவர்களே, நீங்கள் என்ன திட்டம்போட்டு மக்கள் முன் சென்றாலும், தமிழக மக்கள் இந்தமுறை ஏமாற மாட்டார்கள். உங்கள் கட்சியின் பொய் வாக்குறுதிகள், கட்சிக்காரர்களின் அடாவடித்தனம், லஞ்சலாவயங்கள் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீரழிந்தது போன்றவற்றினால் 2026 தேர்தலில் நீங்களும் உங்கள் தீய திமுகவும் தோற்கப்போவது உறுதி. சும்மா புலம்பிக்கொண்டிருக்காமல், இதுவரை வரை தமிழக மக்களுக்கு உங்கள் கட்சி செய்த துரோகம் மற்றும் பாவங்களுக்காக பிராயச்சித்தம் செய்ய ஆவண செய்யுங்கள்.


Ravi
அக் 23, 2025 05:56

மறைமலை நகர் பகுதியில் உள்ள செங்குன்றம், TASMAC பகுதியில் வண்டியில் செல்ல சாலையை கடக்க முடியவில்லை.... அரசு நடவடிக்கை எடுக்குமா?


Venkat
அக் 23, 2025 20:15

Please ask SB who is owner of Tasmac


சமீபத்திய செய்தி