உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில், ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். டவுட் தனபாலு: இப்பதான், ஒரு துறையின் ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ளது... தேர்தல் நெருங்க நெருங்க, இந்த மாதிரி பல துறைகளில் நடந்த ஊழல்களை அமலாக்கத் துறை அம்பலப்படுத்தும் என்பதில், 'டவுட்'டே இல்லை... தேர்தல் பிரசாரத்தில் உங்களுக்கு நல்ல தீனி காத்துட்டு இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை! lll பத்திரிகை செய்தி: 'தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள், நவ., 4 முதல் துவங்கும்' என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்தை, தி.மு.க., தலைமை நிலையச் செயலர் பூச்சி முருகன் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளர். டவுட் தனபாலு: வாக்காளர் பட்டியல் திருத்த பணி மட்டுமா... தேசிய கல்வி கொள்கை, 'நீட்' தேர்வு எதிர்ப்புன்னு தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் கொள்கை அளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை... இதனால, தமிழக மக்கள், 'எதுக்கு த.வெ.க.,வுக்கு தனியா ஓட்டு போடணும்'னு முடிவு பண்ணிட்டா, தி.மு.க.,வுக்கு தான் லாபம் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில், 20,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்து, முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தனியார் பயிற்சியாளர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசும் பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்க வேண்டும். டவுட் தனபாலு: நீங்க முதல்வர், துணை முதல்வரிடம் எடுத்துச் சொன்னாலும், 'மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தான் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியலை'ன்னு தான் விளக்கம் தருவாங்க... அதுக்காக, மத்திய அரசை கண்டிச்சு உங்களை போராட்டம் நடத்தும்படி துாண்டினாலும் துாண்டுவாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை. lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
நவ 01, 2025 18:39

சும்மா ‘ அதில் ஊழல், இதில் ஊழல் ‘ என்று அமலாக்கத்துறை விஜயம் செய்து, வழக்குப் பதியும் நடைமுறைகள் முடிந்து, கோர்ட் கையில் எடுப்பதற்குள், இந்த ஊழல் பணத்தில் 1, 2 % வீசியெறிந்து மக்களை வளைத்துப்போட்டு விடுவார்களே அவர்கள் சாதாரணமானவர்களா? விஞ்ஞான ஊழலில் சரித்திரம் படைத்தவர்களாயிற்றே


Rajan A
நவ 01, 2025 08:03

வளமாக இருக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இது தெரியாமல் வறுத்தெடுத்து அரசியல் ஆக்க வேண்டாம்


duruvasar
நவ 01, 2025 07:51

மத்திய அரசை எதிர்த்து ஒரு போராட்டம் என்பதர்காகத்தான் நேற்று நள்ளிரவு 12 மணிக்குதான் கிடைத்த இந்த ஆசிரியர் பற்றாக்குறை விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்


Rajan A
நவ 01, 2025 08:06

அஷ்டமி, நவமி என்பதால் முந்தைய நாட்களில் குரல் கொடுக்கவில்லை. விடுங்க, முடியலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை