உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன்: கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, அவர் பின்னால் அணிவகுத்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைய நிலை வேறு. இன்று, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேறல்ல; இரண்டுமே ஒன்று தான். ஒன்றாக இணைந்து தான் பயணம் செய்கின்றன. டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்'னு காங்., கட்சியின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஏற்கனவே சொல்லிட்டார்... 'நம்மை தவிர வேற யாரும் ஆட்சியில் அமர்ந்துடக் கூடாது... கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவே கூடாது' என்ற கொள்கைகளில் ரெண்டு திராவிட கட்சிகளுமே உறுதியாக இருப்பதால், நீங்க சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை என்பதில், 'டவுட்'டே இல்லை! lll தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக, 50 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்த செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவரது அரசியல் அனுபவம், களப்பணி ஆகியவை, த.வெ.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும். அவருடன், த.வெ.க.,வில் கைகோர்க்கும் அனைவரையும் வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்; நல்லது மட்டும்தான் நடக்கும். வெற்றி நிச்சயம். டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியின் கொள்கைகளால ஈர்க்கப்பட்டு, செங்கோட்டையன் உங்க பக்கம் வந்த மாதிரி தெரியலையே... எம்.ஜி.ஆர்., - ஜெ., மாதிரி சினிமா பிரபலங்கள் தலைமையில் பணிபுரிந்த ராசிதான் தனக்கு, 'ஒர்க் அவுட்' ஆகும்னு நினைச்சு, உங்க கட்சிக்கு வந்துட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது! lll தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: விஜய் தற்போது நடிகராகவே உள்ளார். கட்சி துவங்கியவுடன், 'லாங் ஜம்ப், ஹை ஜம்ப், உலகத்தை தாண்டுவோம்' என சொல்வது பொருத்தமில்லை. ஒரு தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபிக்கட்டும். எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவராக கட்சி தொடங்கினார்; விஜய் நடிகராகத் தான் கட்சி துவங்கியுள்ளார். டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., என்ற ஆளுமைக்கு முன்னாடி யாரும் நிற்கக்கூட முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை... 20 வருஷ அரசியல் அனுபவத்துக்கு பிறகே எம்.ஜி.ஆர்., தனி கட்சி துவங்கினார்... ஆனா, சந்திக்கிற முதல் தேர்தல்லயே முதல்வராகணும் என்ற விஜயின் பகல் கனவு பலிக்குமா என்பது, 'டவுட்'தான்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
நவ 30, 2025 18:53

தவெக கொள்கைகளால் ஈக்கப்பட்டு செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. அற்ற குளதது அறுநீர் பறவை வாடி நின்றதுபோல் அதிமுக வில் ஒதுக்கி விட்டதால் வேறு வழியின்றி பதவி அரிப்பில் தாவியுள்ளார்.


Anantharaman Srinivasan
நவ 30, 2025 18:41

செங்கோட்டை யா... உள்ளிருக்கும் வரை மன போராட்டம். வெளியேறிய பின் ஞானோதம் அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேறல்லயென்று, எட்டாத பழத்தை சீ..சீ இந்த பழம் புளிக்கும் என்று நரி சொன்னதைப்போன்று.


D.Ambujavalli
நவ 30, 2025 05:55

திமுகவில் தனது பணிக்கும் பதவிக்கும் அங்கீகாரம் இன்றி ஒரே குடும்ப ஆட்சி . கணக்கு, கேள்வி கேட்டால் எதிர்ப்பு என்ற நிலையில் வெளியேறினார் எம் ஜி. ஆர். அவரது சினிமா பிரபலம் மட்டுமே அவரை உயர்த்திவிடவில்லை. இதை விஜய் உணர்ந்து படிப்படியாக மேலே வர முயலட்டும்.


சமீபத்திய செய்தி