உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத்:

முருக பக்தர்களின் உரிமையை உறுதி செய்து, 'திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம்' என, உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் புத்தகம் வெளியிட முயன்றவர்கள் குறித்து, சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டோம். ஆனால், நான் உட்பட 28 பேர், சட்ட விரோதமாக செயல்பட்டு உள்ளதாக கூறி, எங்களின், 'எக்ஸ்' வலைதள கணக்குகளை முடக்கும்படி, அந்நிறுவனத்துக்கு தமிழக காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு கடிதம் எழுதி உள்ளது.

டவுட் தனபாலு:

ஹிந்து கடவுள்கள் பற்றியும், அவங்க வழிபாடு பற்றியும் கேலி, கிண்டல் பண்ணி எத்தனையோ பேர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுறாங்க... அவங்களை எல்லாம் விட்டுட்டு, உங்க மீது மட்டும் பாய்வது ஏன்...? உங்க தரப்பு மீது நடவடிக்கை எடுத்தால் தான், குறிப்பிட்ட பிரிவினரின் ஓட்டுகள் விழும்னு நினைக்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! ----

தமிழக முதல்வர் ஸ்டாலின்:

தமிழக நலனுக்காக குரல் கொடுக்க அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை. ஆனால், ஆட்சியே போனாலும் நான் பயப்பட மாட்டேன். வழக்கு வரும், வரட்டும். மிசா, தடாவையெல்லாம் பார்த்தது தி.மு.க., இயக்கம். அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க, சி.பி.ஐ., - இ.டி., - ஐ.டி., என எதை அனுப்பினாலும் அஞ்ச மாட்டேன்.

டவுட் தனபாலு:

ஏற்கனவே, அமைச்சர் நேரு அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கிட்டாரு... அடுத்தடுத்து, இன்னும் பல அமைச்சர்கள் மாட்டுவாங்கன்னு தகவல்கள் வருது... அப்படி அவங்க சிக்குறப்ப, 'நான் அப்பவே சொன்னேன் பார்த்தீங்களா... மத்திய அரசு பழி வாங்கும் அரசியல் செய்கிறது'ன்னு சொல்ல வசதியா, இப்பவே அச்சாரம் போடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! ------

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்:

தி.மு.க., கூட்டணியில் என் கட்சிக்காக பேச்செல்லாம் தேவையில்லை. எங்கள் கடமையை மட்டும் நாங்கள் செய்வோம். நாங்கள் என்ன பேச வேண்டும் என்பது, கூட்டணிக்கு தலைமை வகிப்போருக்கு தெரியும். அதனால், அவர்கள் எங்களுக்கு நல்லதே செய்வர்.

டவுட் தனபாலு:

உங்க கட்சிக்கு ரெண்டு அல்லது மூணு தொகுதிகள் தந்தாலே பெரிய விஷயம்... 'இதை வாங்க குழு எல்லாம் போட்டு பேசணுமா' என்ற விரக்தியா அல்லது, 'நாம தான் ராஜ்யசபா எம்.பி., ஆகியாச்சே... இனி, நம்ம கட்சியில யார் எம்.எல்.ஏ.,வாகி என்னத்த சாதிக்க போறாங்க'ன்னு நினைச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
பிப் 24, 2026 12:08

முன்பு மிசா தடா வை எதிர்கொண்ட போது வயது 40 க்கு உள்ளேயிருந்ததால் தாக்கு பிடிக்க முடிந்தது.


duruvasar
பிப் 24, 2026 09:56

முதலில் குரூப் போட்டோவுக்கு நிற்க ஆட்கள் இருக்கிறாங்களானே தெரியல இதுலே 2 அல்லது 3 சீட்டுன்னு உங்களுக்கு டவுட்டு வந்தது கொஞ்சம் ஒவரான டவுட் என்பது தெரியல யா.


D.Ambujavalli
பிப் 24, 2026 06:28

தலைமை கட்சி என்ன அடாவடி செய்தாலும், கைகட்டி, வாய்பொத்தி மூலையில் அமர்ந்திருப்பேன். அவர்கள் தயவால் கிடைத்த ரா , ச . எம். பி. ஒன்றே போதும் என்ற சரணாகதி நிலைக்கு வந்துவிட்டார் இன்னும் எத்தனை காலம் இந்த 'மிசா, தடா ' பல்லவி பாடி மக்களை ஏமாற்றுவீர்கள் அமைச்சர் நேருவில் நூல்பிடித்து கோபாலபுரம், சித்தரஞ்சன் என்று நுழையும்போது நேராக டில்லிக்கு பறந்து, சாத்திய கதவிப்பின் சாஷ்டாங்கமாக விழும் 'வீரம்' எல்லாருக்கும் அம்பலமாகிவிட்டதே


Muralidharan Somasundaram
பிப் 24, 2026 04:48

பிச்சைக்காரன் அம்மா தாயே பிரியாணி போடுங்கம்மான்னா கேட்க முடியும்? தி மு க பழைய சோறு போட்டாலும் வாங்கிக் கொள்ள வேண்டியது தான். ஒன்றும் இல்லை, நாளைக்கு வான்னு சொன்னாலும் மூடிக்கிட்டு போக வேண்டியது தான். ம நீ ம தி மு க கிட்ட எடுக்கப்போவது பிச்சை.


புதிய வீடியோ