உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: 'நடிகர் விஜய், பா.ஜ., மிரட்டலுக்கு அடிபணிய மாட்டார்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுகிறார். தி.மு.க.,வின் மிரட்டலுக்கு பயந்து, அடிபணிந்து, அடங்கி, ஒடுங்கி, பம்மி, வணங்கி, தி.மு.க., கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் திருமாவளவன், பா.ஜ.,வை பார்த்து மிரட்டுகிறது என்று சொல்வது வேடிக்கை. அவருக்கு, உண்மையிலேயே தைரியம் இருந்தால் தி.மு.க.,வுக்கு அடங்க மறுத்து, அத்துமீறி, கூட்டணியை விட்டு வெளியே வர முடியுமா? டவுட் தனபாலு: 'விஜயை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை'ன்னு அடிச்சு பேசாம, திருமாவளவனுக்கு சவால் விடுறாரே... இதனால, திருமாவளவன் சொன்னது உண்மை தானோ என்ற, 'டவுட்' தான் வருது! lll தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: உண்மையான அடிமை கூட்டணி என்றால், அது தி.மு.க., கூட்டணி கட்சிகள் தான். தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும், கூட்டணி கட்சியினர் எதுவும் பேச மாட்டார்கள். அதேபோல பெண்களுக்கு பிரச்னை என்றாலும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதுவும் கேட்பதில்லை. இல்லாத காஸ் தட்டுப்பாட்டுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்; பெண் குழந்தைகள் பாதிப்பு அடைந்ததற்கு என்ன செய்தனர்? டவுட் தனபாலு: ஏற்கனவே, தி.மு.க., தொகுதிகளை குறைச்சு தர்றதால, கூட்டணி கட்சியினர் விரக்தியில் இருக்காங்க... இந்த நேரத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தி, மேலும் தொகுதிகளை குறைச்சிடுவாங்கன்னு பயப்படுறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! lll த.மா.கா., தலைவர் வாசன்: கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு போதை கலாசாரமே ஆணிவேராக இருந்த போதிலும், அவற்றை முற்றிலும் ஒழிக்காமல், தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனியும் தாமதிக்காமல், தமிழக அரசு போதை ஆசாமிகளின் குற்றங்களை தடுக்க, உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டவுட் தனபாலு: இப்ப, தமிழக அரசால ஒரு குண்டூசியை கூட நகர்த்த முடியாது... எல்லா அதிகாரமும், தேர்தல் கமிஷனுக்கு தான் என்பது உங்களுக்கு தெரியாதா... அதனால, தேர்தல் கமிஷனிடம் முறையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரைக்குமாவது, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்தால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAVINDRAN.G
மார் 20, 2026 17:11

தினக்கூலி வாங்குறவர் கூட கடன் இருந்தாலும் கஷ்டப்பட்டு உயரணும் என்று மானத்தோட வாழ்கிறார். ஆனால் இந்த திமுக உதிரி கூட்டணி கட்சிகள் முதுகெலும்பு இல்லாத கஷ்டப்படாத திமுக முதுகில் சவாரி செய்யும் அதன் அல்ப காசுக்கு கொள்கையை அடகு வைக்கும் ஒட்டுண்ணி கட்சிகள் தினக்கூலிக்காரரைவிட கேவலமானவர்கள் .


கல்யாணராமன் சு.
மார் 20, 2026 14:29

அதான் பாஜக ஏற்கனவே பலமுறை தங்கள் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லைனு சொல்லிட்டாங்களே , அப்பறம் எதுக்கு திருப்பி திருப்பி மறுப்பு சொல்லணும்னு நெனைச்சிருக்கலாம் அப்படிங்கற டவுட் ஏன் தனபாலுக்கு வரலை ?


Anantharaman Srinivasan
மார் 20, 2026 12:28

திமுக விடம் பெட்டிவாங்கி பிழைக்கும் கூட்டணி கட்சிகள் உண்மைலேயே அடிமைகள் தான். தின கூலிவாங்கி பிழைக்கும் தொழிலாளிக்கு இருக்கும் தன்மானம் கௌரவம் கூட லட்டர் பேட் கட்சிகளுக்குயில்லை.


D.Ambujavalli
மார் 20, 2026 06:16

பெண்களுக்கு கொடுமை என்று கூவி, பெட்டியையும், சீட்டையும் இழக்க யார்தான் மனுவருவார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை