உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம்: பிரசித்தி பெற்ற கோவில்களில், உள்ளூர் மக்களை சிறப்பு வழியில் தரிசிக்க அனுமதிக்காமல், தி.மு.க., அரசு தடுப்பு வேலி அமைக்கிறது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடாமல் ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியது. ஆன்மிகத்திற்கு எதிரான, தி.மு.க., அரசை மக்கள் துாக்கி வீசுவர். டவுட் தனபாலு: ஹிந்துக்கள் மனதை தி.மு.க., புண்படுத்தியது, சிறுபான்மையினரான உங்களுக்கே வேதனையை தருது... ஆனா, பெரும்பாலான ஹிந்துக்களுக்கு அந்த உணர்வு இல்லாம போனதால தான், 'திராவிட மாடல்' ஆட்சியின் வண்டி அலுங்காம, குலுங்காம தமிழகத்தில் ஓடிட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழகம் முழுதும் ஐந்தாண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி, 2,000 ரூபாய் தருவோம். மீண்டும் ஆட்சியமைத்ததும், அனைத்து மகளிர் கைகளிலும், 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்து விடுவோம். அவர்கள், வீட்டுக்கு என்ன மின்சாதன பொருட்கள் தேவையோ, அதை வாங்கிக்கலாம். டவுட் தனபாலு: கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்திருந்தால், அதுக்காகவே மக்கள் உங்களுக்கு மறுபடியும் ஓட்டு போடுவாங்களே... பிறகு ஏன், இதுபோன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தரணும்... நீங்க செய்த திட்டங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது! பத்திரிகை செய்தி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். இதை பயன்படுத்தி, சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதி கேட்டனர்; ஆனால், தி.மு.க., மறுத்து விட்டது. ஆனாலும், வரும் 20, 21ம் தேதிகளில் சென்னை வரும் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். டவுட் தனபாலு: டில்லியிலும், பஞ்சாபிலும் தேசிய கட்சி யான காங்கிரசை கடுமையாக எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி அரசியல் பண்ணுது... அப்படியிருக்கிறப்ப, தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டு கேட்பாரா அல்லது தி.மு.க.,வுக்கு மட்டும் ஓட்டு கேட்டுட்டு பறந்துடுவாரா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

srinivasan
ஏப் 17, 2026 20:23

இப்படி இலவசங்களைக் கொடுத்து சொத்துவரி மின்சாரவரி தண்ணீர் வரி இன்னும் எத்தனை வரி உண்டோ அவ்வளவும் ஏற்றி மக்களை சுரண்டுவர் தமிழ் நாட்டின் கடன் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சங் கோடியாக உயரும் இது தேவையா?


Anantharaman Srinivasan
ஏப் 17, 2026 19:45

இலவசங்களுக்கும் போலி தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் மூலமாக தடை செய்யும் வரை ஓட்டுப்பதிவு இலவசங்களுக்கு சாதகமாகவே விழும். ஜனநாயகம் பணநாயகமாகும்.


duruvasar
ஏப் 17, 2026 15:29

மறுபடியும் அனைத்து மகளிருக்கும் 8000 ரூபாய் கூப்பன் என்று அளந்து விட்டிருக்கிறாரே .


D.Ambujavalli
ஏப் 17, 2026 06:22

இப்போதே போலி 8000 கூப்பன்கள் பிடிபடுகின்றன. நாளை ஜெயித்து வந்தாலும் ஒரிஜினலுக்கும் புளிக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்களைக் குழப்பி, வர்த்தகர்களை பாதுகாக்கும் இந்தமாதிரி தந்திரமெல்லாம் திராவிட மாடலின் ஸ்பெஷல் வழிமுறைகளாயிற்றே


புதிய வீடியோ