உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு: எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும், நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்ற தோழமையாக உடனிருந்தது தி.மு.க., தான். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால், அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். தற்போது, கூட்டணி முறிந்து விட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை பார்த்தபோது, ஏனோ திகைப்பு ஏற்படவில்லை. தோல்வியும், துரோகமும் எங்களுக்கு புதிதல்ல; ஆனால், அது நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும். டவுட் தனபாலு: கடந்த 2004 முதல் பத்து வருஷங்களா காங்., கூட்டணியில் இருந்த நீங்க, 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்னாடி, காங்., கட்சியை தடாலடியா கழற்றி விட்டீங்களே... அப்ப, நீங்க தேர்தலுக்கு முன்னாடி செய்ததை, காங்கிரசார் இப்ப தேர்தல் முடிஞ்சு செய்திருக்காங்க... நீங்க செய்தா ராஜதந்திரம், காங்., செய்தா துரோகமா என்ற, 'டவுட்'தான் வருது! lll ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: தமிழகத்தில், முதல்வரே தேர்தலில் தோற்கும் அளவுக்கு தி.மு.க., ஆட்சி மோசமாக இருந்துள்ளது. பணத்தையும், சிறுபான்மையினர் ஓட்டுகளையும் நம்பியிருந்த தி.மு.க.,வுக்கு, பெரும்பான்மை மக்கள் தோல்வியையே பரிசளித்துள்ளனர். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... பெரும்பான்மை மக்களின் ஓட்டுகள் தங்களுக்கு வழக்கமா வந்துடும்னு மனப்பால் குடிச்சவங்க, தலையில் இடி இறங்கியது போல இருக்காங்க... திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றவிடாமல் தடுத்து அடாவடி பண்ணியவங்களுக்கு முருக பக்தர்கள் சரியான தண்டனை தந்துட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: கடந்த 22 ஆண்டுகளாக எங்களை பிடித்த சனி விலகி விட்டது என, எங்கள் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேர்தலுக்கு முன் காங்கிரஸ் விலகியிருந்தால், நாங்கள் கூடுதலான தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்போம். காங்கிரசுக்கு, 28 தொகுதிகளை ஒதுக்கி வீணடித்து விட்டோம். டவுட் தனபாலு: அது சரி... இந்த தேர்தலில், 164 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., 59 சீட்களில் தானே ஜெயிச்சிருக்குது... காங்கிரஸ் மட்டும் உங்க கூட்டணிக்கு வராம போயிருந்தா, 2011 தேர்தல் போல இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
மே 09, 2026 19:13

T.R. Balu is so worried as a collection agent of DMK since DMK is out of power both at Centre as well as State


Mohan
மே 09, 2026 15:37

பாலு அய்யா நீங்க ஏதோ சும்மா ஆதரவு குடுத்த மாதிரி , அய்யா கலைஞர் காலத்திலிருஇந்து பாத்துக்கிட்டு இருக்கோம் , என்னஅண்ணா பல்டிகள் பலவிதம்


D.Ambujavalli
மே 09, 2026 06:55

எந்த எதிர்பார்ப்பில் பிரேமலதாவுக்கு 10 சீட் கொடுத்து, 9 ஐ கோட்டை விட்டார்கள்? இப்படி கண்டபடி பங்கு வைத்த கூட்டணியால் கட்சி தோல்வியை தழுவியது


Raajan
மே 09, 2026 06:53

ஆட்சியில் பங்கெடுத்து கடல் மண்ல காசு பார்த்தவருக்கு இது துரோகமாக தெரியுதோ? கடன் யார் கொடுத்தார்கள் என்று இப்போது தெளிவாக இருக்கும் போது கேளுங்கள், அண்ணாமலை அவர்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை