உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம், வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது; தற்போது, 13ம் தேதிக்கு அக்கூட்டம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: எல்லாரும் கூட்டத்தை தள்ளிவைக்கிறதா தான் அறிவிப்பு வெளியிடுவாங்க... தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல்ல, உங்க கட்சிக்கு எந்த பங்களிப்பும் இல்லையே... அப்படியிருந்தும், முன்கூட்டியே கூட்டத்தை நடத்த வேண்டிய அவசரம் ஏன் என்ற, 'டவுட்' எழுதே! lll ராஜ்யசபா காங்., - எம்.பி., கிறிஸ்டோபர் திலக்: தமிழகத்தில் பா.ஜ., நுழைந்து விடக்கூடாது என, த.வெ.க.,வுக்கு காங்., ஆதரவு கொடுத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 39 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர். இதில், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளும் உள்ளன என்பதை மறந்து பேசுகின்றனர். காங்., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய சொல்பவர்கள், அந்த எம்.பி.,க்களையும் ராஜினாமா செய்ய சொல்வரா? உதயநிதி கூட, காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஓட்டுகள் மூலம்தான் வெற்றி பெற்றார். அவர் ராஜினாமா செய்வாரா? டவுட் தனபாலு: நியாயமான கேள்வி தான்... உதயநிதி ரோஷப்பட்டு ராஜினாமா பண்ணிட்டாலும், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்... ஏற்கனவே அடிச்ச விசில் அலையில, உதயநிதியின் தந்தை ஸ்டாலினே தோத்து போயிட்டாரு... அதனால, உதயநிதி அந்த, 'ரிஸ்க்'கை எடுப்பாரா என்பது, 'டவுட்'தான்! lll காங்., - எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார்: தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே, பல்வேறு கூட்டணி அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். எனினும், மதவாத சக்திகளுக்கு எதிராக, 'இண்டி' கூட்டணியில் உறுதியாக இருந்தோம். ஜனநாயக நாட்டில், மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளை தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் ஜனநாயக முடிவுகளுக்கு தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி, த.வெ.க.,வுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளோம். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தேர்தலுக்கு முன்னாடியே த.வெ.க.,வுடன் நீங்க கூட்டணி அமைத்திருந்தால், 150 இடங்களுக்கு மேல ஜெயிச்சிருப்பீங்க... ஆனா, தி.மு.க.,வின் கிளை கழக நிர்வாகிகளாகவே செயல்பட்ட சில காங்., தலைவர்களால, உங்க கனவு பலிக்காம போயிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Saran
மே 10, 2026 22:45

MDMK is shifting to Telungana for 5 years


duruvasar
மே 10, 2026 09:59

லெட்டர் பேட் கூட்டணி இண்டி கூட்டணி. அண்ணன் இன்னும் அதன் பெயரை வைத்துக்கொண்டு உருட்டுவது நகைச்சுவையின் உச்சம்.


Raajan
மே 10, 2026 07:25

தனக்கு இன்னும் ஒரு கட்சி இருக்கிறது என்ற ஞாபகத்தில் பொதுக்குழு, செயல்குழுனு பினாத்துகிறார்


Raajan
மே 10, 2026 07:24

இவர்கள் எல்லாம் கிண்டி கூட்டணி. கேட்டை திறந்தவுடன் பறந்து போன குதிரைகள் மாதிரி ஆகிவிட்டனர். இதில் நிறைய சூட்கேஸை வாங்கிய கட்சிகள் மட்டுமே முதலாளியிடம் அனுமதி வாங்கி போனார்கள்.


Anantharaman Srinivasan
மே 10, 2026 18:34

காங்.. திமுக விடம் பெட்டி வாங்கவேயில்லையா.. ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை