உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்: ஆளும் த.வெ.க., தரப்புக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுப்பது ஜனநாயக விரோதம். சட்ட விதிகளுக்கு எதிரான இச்செயலை ஏற்க முடியாது. கட்சி மாறி வந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, இடைத்தேர்தலில் த.வெ.க., வாய்ப்பளித்தால், அந்த சூழலில் எங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்வோம். டவுட் தனபாலு: நீங்களும், மா.கம்யூ., - வி.சி., கட்சியினரும் தி.மு.க., கூட்டணியில் பல வருஷங்களா இருந்தவங்க... இன்னும் தி.மு.க.,வுடன் நட்பில் இருக்கீங்க... நாளைக்கே தி.மு.க., பேச்சை கேட்டு, 'ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்'னு அறிவிச்சிட்டா என்னாகும்னு பயந்து தான், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்துட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! த.மா.கா., தலைவர் வாசன்: 'மேகதாதுவில் அணை கட்டுவோம்' என்ற கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் பேச்சு, தமிழக விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. காவிரி நீர் இல்லாவிட்டால், தமிழக டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என தெரிந்தே, கர்நாடக காங்., அரசு வீண் பிடிவாதம் பிடிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என, கர்நாடக காங்., அரசை தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும். டவுட் தனபாலு: மேகதாது அணை விவகாரத்தில் உடும்பு பிடியாக இருக்கும் சிவகுமார், இப்ப கர்நாடகாவில் முதல்வராக போறாரு... இனியும் தமிழக முதல்வர் விஜய் அமைதியா இருக்காம, சோனியா, ராகுல் போன்ற காங்., மேலிட தலைவர்களிடம் பேசி, சிவகுமாரின் வேகத்தை கட்டுப்படுத்தணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! காங்., தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி: டில்லியில் காங்., தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என, நாங்கள் எந்த குற்றச்சாட்டும் எழுப்பவில்லை. அப்படியான சந்திப்பு நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை நாங்கள் வெளியிடவும் இல்லை. மே 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல், நேரமின்மையால் ராகுல் -- விஜய் சந்திப்பு நடக்கவில்லை. டவுட் தனபாலு: சாயந்தரம், 6:00 மணிக்கு மேல ராகுல் யாரையும் பார்க்க மாட்டாரா என்ன...? தமிழகத்தில், 59 வருஷங்களுக்கு பிறகு உங்க கட்சிக்கு ஆட்சியில் பங்கு தந்திருக்கும் முதல்வர் விஜயை பார்க்கிறதை விட, ராகுலுக்கு அப்படி என்ன தலை போற வேலை என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

உண்டி குலுக்கி புரம், கம்மி கள்
மே 31, 2026 09:35

ஜன நாயகம் . ஒரு கூட்டணியை அமைத்து தவெகவை எதிர்த்து இப்போ பதவிக்காக இங்கே அணி மாறி மாரடிக்கும் அடிமை கூட்டம்.


D.Ambujavalli
மே 31, 2026 07:30

தஞ்சை கோயில். வாயில். வழி சென்றால். பதவி போய்விடும். என்பது. காங்கிரஸ் தலைமையை. சந்தித்தாலும். போக. சான்ஸ். சான்ஸ். உண்டு. என்று. யாரோ. புரளி கிளப்பியதாக. ஒரு. வதந்தி. பரவி. வருகிறதே. நமக்கு எதற்கு. . Risk என்று. போகவில்லை. போலும். 1


Raajan
மே 31, 2026 07:27

கம்யூனிஸ்ட்கள் இன்னும் பேசுகிறார்களா? தீம்கா கிட்ட சூட்கேஸ் வாங்கியது, 5 வருடம் ஊமையாய் இருந்தது ஞாபகம் இல்லை?


Raajan
மே 31, 2026 07:25

ஏதோ தேவை என்பதால் கான் கட்சியை சேர்த்து கொண்டுள்ளார். இப்பவே நிறைய இடைத்தேர்தல் வருது. இன்னும் ஒரு 10 பேர் ராஜினாமா செய்தால் பப்பு ஃபோட்டோ கூட பார்க்க தேவையில்லை.


சமீபத்திய செய்தி