உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மூன்று மொழிகளில் திருக்குறள்: எட்டு மணி நேரத்தில் எழுதிய சிறுவன்

மூன்று மொழிகளில் திருக்குறள்: எட்டு மணி நேரத்தில் எழுதிய சிறுவன்

சென்னை: மேற்கு அண்ணா நகர், டி.வி.எஸ்., காலனியைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் ராஜஸ்ரீ தம்பதியின் மகன், ரோஹித், 14; அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை தேசிய நுாலாக்க வலியுறுத்தி புதிய சாதனை முயற்சியை, நேற்று முன்தினம் காலை வீட்டில் துவக்கினார்.திருவள்ளுவர் படம் பதிக்கப்பட்ட 7 அடி பேனரில், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில், 1,330 திருக்குறளை ஓவியம் போல எழுதினார். காலை, 8:20 மணிக்கு துவங்கிய சாதனை முயற்சியை, மாலை, 4:43 மணிக்கு ரோஹித் நிறைவு செய்தார்.இந்நிகழ்வை, 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' எனும் சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள், ஆன்லைனில் கண்டு சாதனையாக பதிவு செய்தனர்.இதுகுறித்து, ரோஹித் தாய் ராஜஸ்ரீ கூறுகையில், “ரோஹித் சிறுவயதில் இருந்தே, பல்வேறு சாதனை படைத்து வருகிறார். 'அபாகஸ்' எனும் கணித கணக்கீடை செய்து கொண்டே பல்வேறு வகையில், நான்கு முறை சாதனை படைத்துள்ளார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R. THIAGARAJAN
ஜன 17, 2025 13:32

Foot forward to achieve The world must see you Rohit. God Bless You


Ramprakash
ஜன 17, 2025 11:26

வாழ்த்துக்கள் ரோஹித்.. Wish you all success ..


Kalyanaraman
ஜன 17, 2025 08:05

பாராட்டுக்கள். மேலும் பல சாதனைகளை தொடர வாழ்த்துக்கள்.


Subramanian
ஜன 17, 2025 06:54

வாழ்த்துகள், பாராட்டுகள்