உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  அ.தி.மு.க., பிரசாரத்தில் ஆட்டம்: அரசு பள்ளி ஆசிரியருக்கு சிக்கல்

 அ.தி.மு.க., பிரசாரத்தில் ஆட்டம்: அரசு பள்ளி ஆசிரியருக்கு சிக்கல்

புதுக்கோட்டை: அ.தி.மு.க., பிரசாரத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரசாரத்தில் நேற்று ஈடுபட்ட போது, மாற்றுப்பணியில் விராலிமலைக்கு வந்துள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர் ராஜேஷ்கண்ணன், அ.தி.மு.க., கட்சி துண்டு அணிந்துகொண்டு, பிரசாரத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அரசுப்பணியில் உள்ள சிறப்பு ஆசிரியர், ஒரு அரசியல் கட்சிக்கு ஓட்டு சேகரிக்கும் நோக்கத்தில் குத்தாட்டம் போடுவது குறித்து, தி.மு.க., தரப்பினர் விராலிமலை தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை