உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  த.வெ.க.,வுக்கு தாவிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

 த.வெ.க.,வுக்கு தாவிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மூவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தஞ்சாவூர் அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சேகர் மீது ஏ ற்பட்ட அதிருப்தியால், 2025ம் ஆண்டு செப்., 11ம் தேதி, பட்டுக்கோட்டை நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்களான குமணன், சுரேஷ், லதா ஆண் ட்ரூஸ் ஆகியோர், தி.மு.க., சேர்மன் சண்முகப்ரியா முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். த ற்போதைய தேர்தலில், மாவட்ட செயலர் சேகர், வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார். இ தனால் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், சில வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் தேர்தலில் மு றையாக வேலை செய்யவில்லை. தோல்வியை சந்தித்த சேகர், 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சேகர் மீதான அதிருப்தியால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நாகலட்சுமி, ஜெயராமன், நளினி ஆகியோர், த.வெ.க., தெற்கு மாவட்ட செ யலர் மதன் முன்னிலையில், நேற்று முன்தினம் அக்கட்சியில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை