வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆயுள் காலத்தை குறைக்கவோ கூட்டவோ இறைவனாலும்கூட முடியாது என்பது உண்மை.
பரேலி: உத்தர பிரதேசத்தில், மூளைச்சாவு அடைந்ததாக டாக்டரால் அறிவிக்கப்பட்ட பெண்ணின் உடலை, வீட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கி ஏறியபோது அந்த பெண் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. சுவாச கருவி
உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்தவர் வினிதா சுக்லா. இவர், பிலிபித் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். உடல் நலம் குன்றிய அவரை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், நிலைமை மோசமாக இருப்பதால் பரேலி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வினிதாவுக்கு, 'வென்டிலேட்டர்' எனப்படும், செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, வினிதா மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். எனவே, வினிதாவை வீட்டுக்கு கொண்டு செல்லும் படி டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், வினிதா உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்யும் படி உறவினர்களுக்கு தெரிவித்து விட்டு, ஆம்புலன்சில் அவரது உடலை ஏற்றிக்கொண்டு குடும்பத்தினர் வீட்டுக்கு புறப்பட்டனர். அதிசயம்
வழியில் ஹபிகஞ்ச் பகுதியில் சென்ற ஆம்புலன்ஸ், திடீரென சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி ஏறியது. இதனால் ஆம்பு லன்சில் இருந்தவர்கள் நிலை தடுமாறினர். அப்போது வினிதா உடலில் திடீரென அசைவு ஏற்பட்டு அவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்தது. இதையடுத்து, பாம்பு கடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வினிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 13 நாள் சிகிச்சைக்கு பின் வினிதா மீண்டும் நலமடைந்து வீடு திரும்பினார். இது மருத்துவ உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் காலத்தை குறைக்கவோ கூட்டவோ இறைவனாலும்கூட முடியாது என்பது உண்மை.