உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  வாகனத்தை வேகமாக ஓட்டியதாக தோனிக்கு ரூ.1,000 அபராதம்

 வாகனத்தை வேகமாக ஓட்டியதாக தோனிக்கு ரூ.1,000 அபராதம்

ராஞ்சி: ஜார்க்கண்டில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகக் கூறி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, போலீசார் 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் ரிங் சாலையில் உள்ள பண்ணை வீட்டில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 44, வசித்து வருகிறார். இந்நிலையில், ராஞ்சியில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக, தோனிக்கு போக்குவரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அவரது வீட்டுக்கு அருகே உள்ள தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு கேமராவில் இந்த விதிமீறல் பதிவாகி உள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின், 183-வது பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தோனிக்கு ஜார்க்கண்ட் வீட்டு வசதி வாரியம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ராஞ்சியில் உள்ள ஹர்மு சாலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு நிலம், விதிகளை மீறி வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதாக கவலை தெரிவித்திருந்தது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில், சென்னை அணிக்காக விளையாடும் தோனி, சென்னையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை