| ADDED : ஜன 05, 2025 05:50 PM
வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் 2,68,000 பங்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்து உள்ளதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு பங்கு பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை கமிஷனிடம் அவர் அளித்த ஆவணங்களில் கூறப்பட்டு உள்ளதாவது: அதில், டெஸ்லா நிறுவனத்தின் 2,68,000 பங்குகளை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 11.2 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். குறிப்பிட்டட அந்த தொண்டு நிறுவனங்களுக்கு, அந்த பங்குகளை வேறு நபர்களிடம் விற்கும் எண்ணம் ஏதும் இல்லை. அதற்கான திட்டமும் அவர்களிடம் இல்லை எனக்கூறப்பட்டு உள்ளது. அந்த தொண்டு நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் பங்குகளை நன்கொடையாக வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், 2022 ல் 195 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளையும் 2021 ல் 570 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளையும் அவர் நன்கொடையாக வழங்கி இருந்தார்.ப்ளூம்பெர்க் அறிக்கைப்படி உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 41500 கோடி அமெரிக்க டாலர்களை தாண்டும். இன்னும் அவரிடம் டெஸ்டால நிறுவனத்தின் 41.1 கோடி பங்குகள் அவர் அமைத்த அறக்கட்டளை வசம் உள்ளன.டெஸ்லா நிறுவனம் தவிர்த்து, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலைதளங்களின் உரிமையாளர் ஆகவும் எலான் மஸ்க் உள்ளது குறிப்பிடத்தக்கது.