வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாதனை!
மேலும் செய்திகள்
800 கிலோ 'அன்னபாக்யா' அரிசி பறிமுதல்
05-Aug-2025
திருப்பூர்: தனது நுாறாவது பிறந்த நாளை, திருப்பூரை சேர்ந்த மூதாட்டி, 97 பேரன், பேத்திகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். திருப்பூரை சேர்ந்த அன்னபூரணி என்ற அன்னக்கிளி ஆத்தாள். இவரது நுாறாவது பி றந்த நாள் கொண்டாட்டம் மற்றும் குடும்ப சங்கம விழா கே.செட்டிபாளையத்தில் நேற்று நடந்தது. இதில் 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டினர். மகன், மகள், பேரன், பேத்தி அனைவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து அன்னபூரணியிடம் ஆசீர்வாதம் பெற்றனர். கேக் வெட்டி கொண்டாடினர். அன்னபூரணி 12 வயதில் கிருஷ்ணசாமி என்பவரை மணந்தார். கணவர் காலமாகிவிட்டார். அன்னபூரணி கூறியதாவது: ஐந்து தலைமுறையினருடன் இணைந்து நுாறாவது பிறந்த நாள் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. அப்போதெல்லாம் சோளம், கம்பு, கேழ்வரகு தான் உணவாக இருந்தது. வாரத்தில், 3 நாட்கள் அசைவ உணவு சாப்பிடுவேன். எனக்கு 13 குழந்தைகள் என்று சொன்னால் கண் பட்டுவிடும் என்று எண்ணி, இதைச் சொல்வதை தவிர்த்திருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
சாதனை!
05-Aug-2025