வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துகள், பாராட்டுகள்
ஓமலுார்; கோவாவில் நடந்த சர்வதேச அளவிலான, 'மினி மிஸ்டர் இந்தியா' பேஷன் ஷோ போட்டியில் நாமக்கலை சேர்ந்த சிறுவன் ஹர்சித் ரோஷன் முதலிடம் பிடித்தார். கோவாவில் நேற்று முன்தினம் இரவு, 'மினி மிஸ்டர் இந்தியா - 2025' போட்டி நடந்தது. இதில், 80 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தியா உள்ளிட்ட, 24 நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில், தமிழகத்தின், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் சதீஷ்பாபு - மிதுனா தம்பதியின் மகன் ஹர்சித் ரோஷன், 9, பங்கேற்றார். இவர், ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். போட்டியில், ஹர்சித் ரோஷன், ஐந்து சுற்றுக்கு பின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று மதியம் விமானத்தில் சேலம் வந்த சிறுவனுக்கு, உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுவனின் தந்தை சதீஷ்பாபு கூறுகையில், ''பேஷன் ஷோவில் அதிகமானோர் ஆர்வம் காட்டுவது கிடையாது. இப்போட்டியில் பங்கேற்க சிறு வயது முதலே பயிற்சி வழங்கப்பட்டது. கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த பேஷன் ஷோவில் ஹரிசித் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது, 24 நாடுகள் பங்கேற்ற போட்டியில், டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.
வாழ்த்துகள், பாராட்டுகள்