உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / திருச்சியில் த்ரிஷா நற்பணி மன்றம்

திருச்சியில் த்ரிஷா நற்பணி மன்றம்

திருச்சி: திருச்சியில், தமிழ்நாடு த்ரிஷா நற்பணி மன்றம் என்ற பெயரில், புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியைப் பிடித்த பின், நடிகை த்ரிஷா பெயரில், மதுரையில் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டது. நெல்லையில், கடந்த வாரம் 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற பெயரில், ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில், திருச்சி, குட்ஷெட் சாலையில் உள்ள தனியார் நிறுவன மையத்தில், தமிழ்நாடு த்ரிஷா நற்பணி மன்றம் என்ற பெயரில், புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பேனரில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறிய 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த புதிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்ட செல்வம் என்பவர் கூறுகையில், ''நான் எந்த கட்சியையும் சாராதவன். த்ரிஷா அக்கா திறமையானவர். ஜெயலலிதாவுக்கு இணையான திறமை கொண்டவர். எனவே, த்ரிஷாவின் பெயரில் மன்றம் தொடங்கி, எங்கள் சொந்த பணத்தில் நலத்திட்டங்களை செய்ய உள்ளோம். வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை,'' என்றார்.தமிழ்நாடு த்ரிஷா நற்பணி மன்றம் தொடக்க விழாவில், 50 பெண்கள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை