உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அடடடா... எப்பேர்ப்பட்ட மேதாவிலாசம்!

அடடடா... எப்பேர்ப்பட்ட மேதாவிலாசம்!

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காமெடி'யாக பேசவென்றே ஒரு குழு எல்லா துறையிலும் இருக்குமே... அந்த குழுவில் சமீபத்தில் சேர்ந்து விட்டார், காங்., ராகுல்.'இதுவரை ஏராளமான பெண்கள், 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் ஒருவர் கூட தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் இல்லை. இது குறித்து யாரும் விவாதிக்காதது ஏன்?' என வினவி, ஆட்சியாளர்கள் மீது புழுதி வாரி துாற்றி இருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் இளவரசரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்.அவரது பிரதமர் கனவு நிராசையான நாள் முதலாக, தினமும் ஏதாவது ஒரு விவாதத்தை கிளப்புகிறார்.விவாதம் என்பது ஆரோக்கியமான விஷயங்களில், ஆரோக்கியமான முறையில், பலருக்கும் பலனளிக்கும் விதமாய் அமைந்தால் நல்லது.மிஸ் இந்தியா போட்டியில் ஒதுக்கீடா கொடுக்க முடியும்?இப்போட்டியில் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று யாராவது தடுத்து இருக்கின்றனரா அல்லது தடை விதித்து இருக்கின்றனரா?உடலமைப்பை வெளிப்படையாகக் காட்டும் போட்டி அது. அதில் யாருக்கு தடை உள்ளது?இவ்வளவு ஆதங்கப்படுபவர், தன் சொந்த செலவில் அழகிப் போட்டி நடத்தி, 'மிஸ் இந்தியா' என்ன... 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் கூட கொடுக்கலாமே!ஏன் இப்படி எக்குத்தப்பாய் கோரிக்கை வைக்கிறார் ராகுல்? என்னே இவரது மேதாவிலாசம்!

ஈ க்களை மட்டும் பிடிக்கிறதோ சட்டம்?

பி.சுப்பிரமணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில் சில தினங்களுக்கு முன், '151 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்கு கள்' என்ற தலைப்பில் வெளியான செய்தி படித்தேன். இவர்களை தேர்ந்தெடுத்தநாம் தான் வெட்கப்படுகிறோம்; இவர்கள் யாரும் சிறிதும் வெட்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல,தங்களை நியாய வாதிகளாகவும் காட்டிக் கொள்கின்றனர். காரணம், மக்கள்பிரதிநிதிகள் மீது வழக்கு தொடர, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சாமானியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான தண்டனைசட்டங்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு செல்லாது போலும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை கேலிக் கூத்தாக்கி விட்டனர். ஆள்பலம், அடாவடி, அராஜகம் செய்தாலும் சட்டத்தின் ஓட்டைகள் வாயிலாக, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது, சாட்சிகளை அச்சுறுத்துவது, சில காவல் துறையினர் இவர்களுக்குதுணை நிற்பது ஆகியவை தினமும் அரங்கேறுகின்றன.'குண்டர் சட்டத்தில் ஆறு முறை கைதானவர், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி போன்ற 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மேல் உள்ளன' என்ற செய்திகள், தினமும்வெளியாகின்றன.இங்கு, வளைகுடா நாடுகளை போல் கடுமையானதண்டனை இல்லை. இதுவே துணிந்து அக்கிரமங்களை அரங்கேற்றுவதற்கு துணை போகின்றன. சட்டம் ஈக்களை பிடிக்கும்; குளவிகளை தப்பவிடும்.இந்த நிலை நம் நாட்டில்மாறினால் தான், ஜனநாயக நாடு என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

வெல் வாரா பிரசாந்த் கிஷோர்?

வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும், 2025ல் நடைபெற உள்ள பீஹார் மாநில சட்டசபை தேர்தல், இப்போதில் இருந்தே சூடுபிடித்து வருகிறது. காரணம், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின், 'ஜன சுராஜ்' அரசியல் அமைப்பு, அனைத்து தொகுதிகளிலும்போட்டியிடுகிறது; இதை அவரே அறிவித்துள்ளார்.'பீஹாரில் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், 243 தொகுதிகளிலும், ஜன சுராஜ் போட்டியிடும். இதில் குறைந்தபட்சம், 40 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவர்' என, அவர் தெரிவித்துள்ளார்.பீஹார் மாநிலம் முழுதும் தற்போது அவர் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். 2022, அக்டோபர் 2ல் இதை அவர் துவங்கினார். இதுவரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு உள்ள அவர், 5,000 கி.மீ., கடந்துள்ளார்.வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று, ஜன சுராஜ் அரசியல் அமைப்பு, அரசியல் கட்சியாக உதயமாகும் என, ஏற்கனவே அவர் அறிவித்துள்ளதால், அந்நாளில் கட்சி உதயத்தை எதிர்பார்க்கலாம்.'ஐ-பேக்' அமைப்பின்நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பா.ஜ., - தி.மு.க., மற்றும்ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆம் ஆத்மி என, பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்துள்ளார்; வெற்றியும் பெற்றுள்ளார்.இந்த முறை அவருடைய ஜன சுராஜ்போட்டியிட்டு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துபார்ப்போம். 

மூ க்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நக்ஸல்களின் வன்முறையால், கடந்த, 40 ஆண்டுகளில், 17,000த்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால், பா.ஜ., ஆட்சியின் உறுதியான நடவடிக்கைகளின் விளைவாக, 10 ஆண்டுகளில் உயிரிழப்பு, வன்முறை சம்பவங்கள், பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் போன்றவை பெருமளவில் குறைந்துள்ளன. நக்ஸல் தீவிரவாத இயக்கங்களுக்கு, மக்கள்மனங்களில் இடமுமில்லை; தரவுமில்லை. இருந்தாலும்,சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா,ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், நக்ஸல்களின் பிரச்னைகள் அவ்வப்போது எழுகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, '2026 மார்ச் மாதத்திற்குள், ஜனநாயகத்திற்கும், அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இடையூறாக இருந்து வரும்,நக்ஸல்வாதிகளின் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது, வரவேற்கத்தக்கது. முந்தைய ஆட்சிகளைப் போல், 'நாடு எப்படி போனாலும் போகட்டும், எங்கள் ஆட்சி தொடர வேண்டும், எங்கள் ஓட்டு வங்கி கணக்கே எங்களுக்கு முக்கியம்' என்று எண்ணாமல், தேசம், தேசியம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி இவற்றை மனதில் கொண்டு, ஓட்டு வங்கி அரசியல் செய்யாமல் செயல்பட்டு வரும் பா.ஜ., அரசால் மட்டுமே, இது போன்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthikeyan
ஆக 30, 2024 08:11

இவனெல்லாம் எதிர்கட்சித் தலைவர்... இவனெல்லாம் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்...முட்டாப் பயல்... அதேமாதிரி கன்னட வெறியன் கார்கே ஒரு ஜாதி வெறியன் தான்...


Dharmavaan
ஆக 29, 2024 09:13

உலக அழகி போட்டி நாட்டிற்கு அத்தியாவசியமான ஒன்றா.இதிலும் ஒதுக்கீடு வேண்டுமா இல்லையேல் வாழ்வாதாரம் பாதிக்குமா... என்ன அறிவில்லாத பேச்சு .இவனெல்லாம் நாடாண்டால் நாடு நாசமாகும்


VENKATASUBRAMANIAN
ஆக 29, 2024 08:47

ராகுலை பப்பு என்று அழைப்பதில் என்ன தவறு. இதுமாதிரி பேசினால் வேறு என்ன சொல்லுவது. அவருக்கு யாரோ தவறாக சொல்லிக்கொடுத்து கூட இருந்து குழி பறிக்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இது உண்மையாக இருக்க கூடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 29, 2024 20:40

ராகுலுக்கு எழுதிக்கொடுத்தது பாஜக ஆளாக இருப்பாரோ ????


மோகனசுந்தரம்
ஆக 29, 2024 08:18

ராகுலை எண்ணம் என்ன என்று கூறுவது. எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு. எப்படித்தான் வெட்கமில்லாமல் இப்படி பேச முடிகிறதோ தெரியவில்லை. எப்பாடுபட்டாவது இந்துக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற ஒரே சிந்தனை தான் இவருக்கு உள்ளது போலும். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன.அதை முன்னிட்டு ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும்.


R.Varadarajan
ஆக 29, 2024 07:30

அகில உலகிலேயே ஒரே அதி மேதாவி இந்திய முஸ்ஸோலினியின் இத்தாலிய பேரன்.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 29, 2024 02:31

அரசில் அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்தவர்களை இதுவரை அவர் அந்த பதவிகளுக்கு தகுந்த திறைமையானவரா, நிருவாக நுணுக்கங்கள் தெரிந்தவரா, பிரச்சனைகளை சமாளித்து சரியான முடிவு எடுப்பவரா என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்தவர்களை ஜாதி அடையாளம் கொடுக்க துடிக்கும் இந்த கான் போலி கண்டியை என்ன செய்வது? இவனுக்கு வோட்டை போடும் அறிவாளிகளை என்னவென்று சொல்வது.


சமீபத்திய செய்தி