உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஏமாந்த தமிழர்கள்!

ஏமாந்த தமிழர்கள்!

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு,ஏழு பேர் இறந்தது குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம், 'எப்போ... ஓ மை காட்' என்று கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு, பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார், நடிகர் ரஜினிகாந்த். லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகரான அவர், தமிழக மக்கள் படும் துயர்கள் குறித்து அறியாமல் இருப்பதும், அதில், ஒரு துளிகூட பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உச்சாணிக்கொம்பில் இருந்தபடி கோடிகளைக் குவித்துவரும் இவருக்கு, அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்க எப்படி நேரம் கிடைக்கும்?'என் ஒரு துளி வியர்வைக்கு, ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா... என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும்,தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா' என்று பாடியது நினைவு இருக்கிறதா ரஜினி...பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் வார்த்தைகூட சொல்லாத நீங்கள், சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதை உணர்த்தி விட்டீர்களே!உங்களை உச்சாணிக்கொம்பிற்கு ஏற்றிவிட்ட தமிழர்களுக்கு, நீங்கள் உடல், பொருள், ஆவியை தியாகம் செய்ய வேண்டாம்... ஒரு படத்திற்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை, நிதியாகவோ அல்லது பாதிக்கப்பட்ட கிராமங்களின் மறுவாழ்வுக்கோ அளிக்கலாம்!தமிழகத்தில் கெட்டுப்போய் கிடக்கும், 'சிஸ்டத்தை' மாற்றுவதற்காக, அரசியலுக்குவரப்போவதாகக் கூறிய நீங்கள், 'இங்குள்ளபணநாயக அரசியலில் இறங்கினால், சம்பாதித்த பணம் அத்தனையும் கரைந்துவிடும்' என்பது புரிந்து, உங்கள் உடல்நிலையைக் காரணம் காட்டி, தந்திரமாக தப்பி விட்டீர்கள். ஆனால், இந்த 73 வயதிலும் கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறீர்கள்!தமிழகத்தில் புயல், வெள்ளம், நிலச்சரிவுஏற்பட்டால் என்ன... நீங்கள் சம்பாதிக்கும் கோடிகளில் எந்த சரிவும் வராமல் ரசிகர்கள்உங்களை பார்த்துக் கொள்வர். உங்கள் ஒவ்வொரு அசைவிற்கும், 100 பொற்காசுகளை அள்ளிவீச, தமிழன் என்ற இளிச்சவாயன் இருக்கும் வரை, 70 வயதல்ல... 100 வயது ஆனாலும், புதுப்புது நாயகியருடன் நீங்கள் ஆடலாம், பாடலாம்!தொடரட்டும், உங்கள் கலைப்பணி!

தமிழ் படித்தால் வாழ்வு இல்லை!

பொன்.தாமோ, சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை' என்று ஆட்சியாளர்கள் அவ்வப்போது பம்மாத்துபேச்சு பேசுகின்றனர். ஆனால்,தமிழ் படித்தவர்களின் உண்மை நிலை என்ன தெரியுமா... கடந்த 2017 வரை, தமிழ்இலக்கியத்தில் இளங்கலைபி.லிட்., முடித்து, தமிழ்ப் புலவர் பயிற்சி பட்டய படிப்பு முடித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, பணிக்குச் செல்லலாம்என்ற நிலை இருந்தது. இப்படிப்பை முடித்த நுாற்றுக்கணக்கானோர் பணியிலும் உள்ளனர்.ஆனால், தற்போது, தமிழ்புலவர் பயிற்சி முடித்தவர்களால் தகுதி தேர்வு எழுத முடியாது. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில்வெற்றி பெற்று, பட்டதாரிஆசிரியருக்கான நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள், நீதிமன்றத்திற்குநடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் படிக்க வருவோர்,கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளைகளோ, அரசியல்வாதியின் புத்திரர்களோ, அரசு அதிகாரிகளின் மக்களோ அல்ல... ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பி.எட்., படிக்க வசதி இல்லாதவர்கள். இவர்களுக்காக, குறைந்தகட்டணத்தில், தமிழ் புலவர்ஆசிரியர் பயிற்சி கொண்டுவரப்பட்டது. இதுவரை, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், 40,000 பேர், இப்பயிற்சி முடித்துள்ளனர். 'பி.லிட்., பயிற்சி முடித்தால், நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகலாம்' என்று அரசாணை பிறப்பித்தவர்,மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், தற்போது தமிழ்புலவர்கள் நியமன தேர்வில்வெற்றி பெற்றும், பணிக்குசெல்ல முடியாமல், அதுகுறித்து கேட்பதற்கு கூடநாதியற்றவர்களாக, வீதியில் நிற்கின்றனர். ஒரு பாடத்திட்டத்தில் குறை இருந்தால், அதை சரி செய்து, செம்மையாக்குவது தான் அறிவுடைய செயல். தகுதி குறைவான பட்டயப்படிப்பை பல்கலைக் கழகம் நடத்துவதாக நினைத்தால், அப்பல்கலைக் கழகத்தின் மீது தான், நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதை விடுத்து, அங்கு படித்தவர்களை பழி வாங்குவது என்ன நியாயம்? அப்படிப்பையே நீக்குவதுஎன்பது, தமிழ் மொழிக்குச்செய்யும் துரோகம் இல்லையா? முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், தமிழ் புலவர் பயிற்சி நீக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, தி,மு.க., ஆட்சி, அந்த படிப்பையே செல்லாது என்று கூறுகிறது.அப்படியென்றால், அப்படிப்புக்காக செய்த பொருள் செலவு, காலம், உழைப்பு இவற்றுக்குஎல்லாம் யார் இழப்பீடு தருவர்?பொறுப்பற்ற அரசுகளால்,மாணவர்களின் பொன்னான நேரமும், எதிர்கால கனவுகளும் தான் வீணாகிப் போயின.தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்பதெல்லாம்,வெறும் வாய்ப்பேச்சு. தமிழை வைத்து அரசியல்வாதிகள் தான் வாழ்கின்றனரே தவிர, தமிழ் படித்தவர்களுக்கு வாழ்வு இல்லை!

மத்திய அரசு மனசு வைக்குமா?

எஸ்.கிருஷ்ணன், சின்னவேடம்பட்டி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பீஹாரில், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்டிராபி ஹாக்கி போட்டியில்,நம்முடன் மோதிய, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேஷியா மற்றும் தென்கொரியா என, அத்தனை நாட்டினரையும் தோற்கடித்து, வெற்றி வாகை சூடி உள்ளனர், நம் வீராங்கனையர். உலக ஹாக்கி போட்டியில், வெள்ளிப் பதக்கம்வென்றதன் வாயிலாக, உலக தரவரிசையில் ஆறாவது இடத்திலிருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி,முன்வரிசைக்குமுன்னேறி, நம் தேசத்தின் பெருமையை திக்கெட்டும்பரவச் செய்தனர், நம் வீராங்கனையர்!மற்ற விளையாட்டுகளுக்குகொடுக்கும் முன்னுரிமையை,ஹாக்கி விளையாட்டுக்கு நாம் கொடுப்பதில்லை. கிரிக்கெட் விளையாட்டுக்குகோடி கோடியாய் செலவழித்து, அதன் புகழை உலகம் முழுதும் பரவச் செய்யும் நாம், சில கோடி ரூபாயை, நம் தேசிய விளையாட்டான ஹாக்கிக்குஒதுக்க நினைப்பதில்லை. மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கும்ஊக்கத்தொகையை, இவர்களுக்கும் வழங்கி சிலவசதிகளை செய்து கொடுத்தால், உலக தரவரிசையில், முதல் அணியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. உலக விளையாட்டு அரங்கில், கிரிக்கெட்டை போல்ஹாக்கிக்கு முன்னுரிமை கொடுத்தால், பல திறமையான வீரர் - வீராங்கனையரை நம்மால் உருவாக்க முடியும். இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு நிரந்தரமானஅடையாளமும் கிடைக்கும்!மத்திய அரசு மனது வைக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Saravana Kumar
டிச 16, 2024 16:16

M ர் ராதா சொன்னது போல் நடிகனை நாடிகனாய் பாருங்கள் . அதை தாண்டி அவர் அதை செய்வார் இதை செய்வார் என்று ஏமாறுவது உங்கள் தப்பு. நீ ஏன் நடிகனில் தலைவனை தேடுகிறாய்.


Giriraj
டிச 16, 2024 10:19

ரஜினி என்னவென்று கேட்டு விட்டால் போதுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா? கேள்வி கேட்ட, விசாரித்த எவ்வளவு பேர் மக்களுக்கு உதவியுள்ளார்கள்? ஆனால் ரஜினி உதவி வருகிறார். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடந்த ஒரு வாரமாக நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார். ரஜினி உதவியது எதாவது தெரியுமா?


Selvaraj K
டிச 15, 2024 19:18

எம் சீ ஆர் காலம் படிப்பு இல்லை சினிமா கவர்ச்சி இன்று எல்லோரும் படித்தவர்கள் பணம் தான் முக்கியம் சேவை இரண்டாவது அது அவர்கள் விருப்பம் இதில் இனம் மொழி வேண்டாம்


visu
டிச 15, 2024 16:35

வித்யாசாகர் ரஜினியின் பொருளாதார வளர்ச்சியை கண்டு பொறாமையில் புலம்புவது ஆச்சார்யம் .அவர் உழைக்கிறார் அவர் சம்பாதிக்கிறார் அதை வாழ்த்துவது மட்டுமே நம் பங்கு பொறாமை நம்மை அழித்துவிடும்


K Raveendiran Nair
டிச 15, 2024 15:34

தமிழன் திருந்தப் போவதே கிடையாது


Anantharaman Srinivasan
டிச 15, 2024 15:20

ரஜினிக்கு கடிதம் வித்யாசாகருக்கு ரஜினி, லதா பற்றிய சுயரூபம் தெரியவில்லை. தனக்கிருக்கும் வாய்ஸ்சை வைத்துக்கொண்டு வருமானவரி ஏய்ப்பு மட்டுமன்றி தமிழகயரசு மாநகராட்சி வரியையும் ஏமாற்றியவர்.


P.Chandrasekaran
டிச 15, 2024 13:05

உலக நடப்புகளை மக்கள் துயரங்களை அறியாதவர்


Bhaskaran
டிச 15, 2024 13:01

ரஜனி ஒன்றாம் நம்பர் சுயநலவாதி இன்றைய தலைமுறைக்கு அவர் சுய ரூபம் தெரியவில்லை


Dharmavaan
டிச 15, 2024 09:42

மத்திய அரசு தரும் நிதி கொள்ளை அடிக்கவே போதவில்லை, மக்களுக்கு எப்படி கொடுப்பது. வடிகால்களை சரி செய்யாமல் ஆக்கிரமித்து விட்டு வெள்ளம் வந்து சொத்து எல்லாம் பாழான பிறகு கண் துடைப்பு வேலையாக நீர் வெளிஏற்றம் சாப்பாடு போன்ற திருட்டு வேலை. மூடர்கள் போடும் ஒட்டு மற்றவர்களை பாதிக்கிறது எப்போது புத்தி வரும்


Dharmavaan
டிச 15, 2024 09:37

ரஜினி ஒரு எத்தன. எந்த அரசியலிலும் மாட்டிக்கொள்ளாமல் பணம் குவிப்பதிலேயே கருத்துள்ளவன், தமிழ் மக்களை பற்றி அக்கறை இல்லாத மராட்டியன் எம்ஜிஆர் நிறைய தாநங்கள் செய்தார்.லவன் சுநலக்காரன் கமல் போல் சொந்த படமும் கூட தயாரிப்பதில்லை .இவன் புதிய கட்சி ஆரம்பிப்பதில் பின் வாங்கியதன் காரணமே திமுகவிலிருந்து பெரும் தொகை வாங்கி கொண்டு விட்டிருப்பான் .வஞ்சகன்


முக்கிய வீடியோ