ஜூலை 5, 1902சென்னையில், கிருஷ்ணசாமி - சிவஞானம் தம்பதியின் மகனாக, 1902ல் இதே நாளில் பிறந்தவர் அல்லிக்குழி கிருஷ்ணசாமி பரந்தாமனார் எனும், அ.கி.பரந்தாமனார்.இவர், சென்னை, வேப்பேரி செயின்ட் பால் பள்ளி, பச்சையப்பன் கல்லுாரிகளில் படித்தார். சென்னை, கர்நாடிக் பஞ்சாலையில் எழுத்தர், செயின்ட் பால் பள்ளியில் தமிழாசிரியர் பணிகளை செய்தார். பின், மதுரை தியாகராசர் கல்லுாரியில் 17 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.அவரிடம் கவிஞர்கள் அப்துல் ரகுமான், இன்குலாப், மேத்தா உள்ளிட்டோர் படித்தனர். அதே சமயம், 'தமிழ்நாடு' உள்ளிட்ட இதழ்களில் கவிதை, கட்டுரைகள் எழுதினார். 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா, தமிழ் இலக்கியம் கற்க, பன்முக பார்வையில் பாரதி, திருமலை நாயக்கர் வரலாறு, தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்' உள்ளிட்ட நுால்களை எழுதினார்.தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் விளக்குவது, தமிழில் பிழை இல்லாமல் எழுதுவது குறித்து, பல உதாரணங்களுடன் நுால்களை எழுதினார். தன் எழுத்தால், தமிழ், வரலாற்று பணிகளை செய்த பல்துறை வித்தகரான இவர், தன் 84வது வயதில், 1986ல் மறைந்தார்.தமிழக அரசின் திரு.வி.க., விருது பெற்ற, 'பைந்தமிழ்ப் பாவலர், பிறந்த தினம் இன்று!