உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜூலை 13, 1953 தேனி மாவட்டம், வடுகப்பட்டியில், ராமசாமி தேவர் - அங்கம்மாள் தம்பதியின் மகனாக, 1953ல் இதேநாளில் பிறந்தவர் வைரமுத்து.இவர், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்தார். அப்போது எழுதிய, 'வைகறை மேகங்கள்' கவிதை நுால் தமிழறிஞர்களால் பாராட்டப்பட்டது. பின், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய போது, இயக்குனர் பாரதி ராஜாவிடம் தன் கவிதை நுாலை தந்து, பாடல் எழுத வாய்ப்பு கேட்டார்; அவர், இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அறிமுகம் செய்தார். 1980ல், நிழல்கள் படத்தில், 'பொன்மாலைப்பொழுது' பாடலை எழுதினார். இவர் இளையராஜாவுடன் இணைந்து எண்ணற்ற ஹிட் பாடல்களை தந்தார். 1991ல், ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமான, ரோஜா படத்திற்கு இவர் எழுதிய பாடல்களுக்கு, பெருவெற்றியும், தேசிய விருதும் கிடைத்தன. இவரின், 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலுக்கு, 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்தது. நாட்டின் உயரிய விருதான, 'பத்மஸ்ரீ' உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ள, 'கவிப்பேரரசி'ன் 71வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி