உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜூலை 16, 1968 மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள காட்கியில், தமிழர்களான நாகலிங்கம் பிள்ளை - ஆண்டாளம்மா தம்பதியின் மகனாக, 1968ல் இதே நாளில் பிறந்தவர் தன்ராஜ் பிள்ளை. குடும்ப வறுமையால், சிறுவயதில் ஹாக்கி மட்டை, பந்து வாங்க முடியாமல் குச்சி, கிழிந்த பந்தில் பயிற்சி பெற்றார். 17வது வயதில், ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11.6 வினாடிகளில் 100 மீட்டர் துாரத்தை கடக்கும் இவரது திறமையை கண்ட கேப்டன் ஜோக்கிம் கார்வால்ஹோ, மஹிந்திரா கிளப்பில் சேர்த்து விட்டார்.அங்கு சர்வதேச வீரர்களுடன் விளையாடி, திறமையை வளர்த்துக் கொண்டார். 1998ல் இந்திய அணியின் தலைவராகி, ஆசிய போட்டியில் கோப்பையை கைப்பற்றினார். 330 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 170 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.ஒலிம்பிக், உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பை, ஆசிய விளையாட்டுகளில் தலா நான்கு முறை விளையாடி, பல்வேறு சாதனைகளை படைத்தார். இவருக்கு, 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கப்பட்டுஉள்ளன. இவரது 55வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ