உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 17, 1986கேரள மாநிலம், பாலக்காடு, வடவனுாரில், மருதுார் கோபாலமேனன் - சத்தியபாமா தம்பதியின் மகனாக, 1911, ஜனவரி 13ல் பிறந்தவர், எம்.ஜி.சக்கரபாணி எனும் நீலகண்டன். இவர் பிறந்த சில நாட்களிலேயே, தந்தைக்கு இலங்கையின்கண்டியில் மாஜிஸ்திரேட் பணி கிடைக்க, குடும்பமும் அங்கு சென்றது. இவர், அங்குள்ள பள்ளியில் படித்தார். இவரது தம்பியான எம்.ஜி.ராமச்சந்திரனும் அங்கு பிறந்தார். தந்தையின் இறப்புக்கு பின், இவரது தாய், கும்பகோணத்துக்கு வந்து, இருவரையும் யானையடி பள்ளியில் சேர்த்தார்.இருவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடககம்பெனியில் சேர்ந்து நடித்தனர். இவர், இரு சகோதரர்கள் எனும் படத்தில் அறிமுகமானார். மலைக்கள்ளன், என் தங்கை, பொன்முடி, மருதநாட்டு இளவரசி, அலிபாபாவும் 40 திருடர்களும், நாளை நமதே உள்ளிட்ட படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.தொடர்ந்து, தம்பி எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்காக கதை கேட்பது உள்ளிட்ட பணிகளை செய்த இவர், 1986ல் தன் 75வது வயதில் இதே நாளில் மறைந்தார். எம்.ஜி.ஆருக்கு அண்ணனாகவும், தந்தையாகவும் இருந்து வழிகாட்டிய, 'பெரியவர்' மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ