இதே நாளில் அன்று
அக்டோபர் 8, 1974ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம்,ரல்லபுடகுரு கிராமத்தில், 1911, ஜூலை 26ல் பிறந்தவர் புடகுரு ராமகிருஷ்ணய்யா பந்துலு எனும் பி.ஆர்.பந்துலு.படிப்பை முடித்து, ஆசிரியராகபணியாற்றினார். கலை ஆர்வத்தால், நாடகங்களிலும் நடித்தார். கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தார். பணம் படத்தில், சிறு வேடம் ஏற்று, தமிழ் திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தில் நடித்த சிவாஜி கணேசனின் நண்பரானார்.சினிமா தொழில்நுட்பங்களை கற்று, 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். சிவாஜியை வைத்து, தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், பலே பாண்டியா, கர்ணன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.எம்.ஜி.ஆர்., நடிப்பில், ஆயிரத்தில் ஒருவன்,நாடோடி, ரகசிய போலீஸ் உள்ளிட்ட பல படங்களைஇயக்கினார். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை இயக்கிய போது, 1974ல் தன் 64வது வயதில் இதே நாளில் மறைந்தார்; மீதி படத்தை எம்.ஜி.ஆர்., இயக்கினார். சிவாஜி படத்தில் துவங்கி, எம்.ஜி.ஆர்., படத்துடன் முடிந்த இயக்குனர் மறைந்த தினம் இன்று!