இதே நாளில் அன்று
நவம்பர் 1, 2015இலங்கையின் தென் புலோலியில்உபய கதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை ---- உமையாத்தை தம்பதியின் மகனாக, 1936, நவம்பர் 29ல் பிறந்தவர் வேலுப்பிள்ளை. புலோலியில் துவக்க கல்வியும்,உயர் கல்வியை ஹாட்லிக் கல்லுாரியிலும் கற்றார். பேராதனை பல்கலையில் இளநிலையும், பேராசிரியர் க.கணபதி பிள்ளையின்நெறிப்படுத்துதலில் கலாநிதி பட்டமும் பெற்றார்.பேராதனை பல்கலையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, தமிழ்த்துறை தலைவராக உயர்ந்தார். யாழ்ப்பாண பல்கலை தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார்.அமெரிக்காவின் அரிசோனா பல்கலை, திருவனந்தபுரம் திராவிட மொழியியல் பள்ளி, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவற்றிலும் கல்வி பணியாற்றினார். இவர், 'கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும், சாசனமும் தமிழும், தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழர் சமய வரலாறு' உள்ளிட்ட நுால்களை எழுதி உள்ளார். இவரின், 'காலமும் கருத்தும்' நுால், தமிழ் மொழி வரலாற்றை கூறியது.இவரின், 'உடையார் மிடுக்கு' நாடகம் இலங்கையின்பேச்சு வழக்கில் இயல்பாக அமைந்திருந்தது. இவர்,2015ல் தன் 79வது வயதில் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!