மேலும் செய்திகள்
கர்நாடகா போலீசாரிடம் இருந்து தப்பியவர் கைது
26-Oct-2024
நவம்பர் 5, 1860இலங்கையின் கற்பிட்டியில், காபிரியேல் காசி செட்டி - மேரி தம்பதியின் மகனாக, 1807, மார்ச் 21ல் பிறந்தவர் சைமன் காசி செட்டி. இவரது குடும்பம், திருநெல்வேலியைப்பூர்வீகமாகக் கொண்டது.இலங்கையில், தமிழ், ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், டச்சு, லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளை படித்த இவர், இலங்கையின் புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். புத்தளம், சிலாபம் பகுதிகளின் மணியக்காரராகவும் இருந்தார்.கடந்த 1838ல், இலங்கையின் தமிழ்எம்.எல்.ஏ.,வானார். 1848ல் தற்காலிக நீதிபதியாக இருந்த இவர், 1852ல் நிரந்தர நீதிபதி ஆனார். தன் பணிகளுக்கு இடையில், தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதினார்.தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ் தாவரவியல் அகராதி, யாழ்ப்பாண வரலாறு, பரதவர் குல வரலாறு, தமிழ் நுால்களின்பட்டியல், தமிழர் சடங்கு முறைகள் உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், 1860ல் தன் 53வது வயதில் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!
26-Oct-2024