இதே நாளில் அன்று
நவம்பர் 26, 1921கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அறுவை சிகிச்சை நிபுணரான புத்தன்பரக்கல் குரியன் என்பவரது மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் வர்கீஸ் குரியன்.தமிழகத்திலும், அமெரிக்காவிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், குஜராத்தின், ஆனந்த் மாவட்ட பால் பண்ணையில் இன்ஜினியராக சேர்ந்தார். அது, நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்ததால், பணியாற்ற விரும்பாமல் அதில் இருந்து விலகினார்.பின்னர், சுதந்திர போராட்ட வீரர் திரிபுவன்தாஸ் தலைமையில் இயங்கிய கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்று, 'அமுல்' என்ற பெயரில் நவீனமயமாக்கினார். செயற்கை கருவூட்டல், பால் உற்பத்தி பெருக்கம், உப பொருட்கள் தயாரிப்பு என, விவசாயிகளை முன்னேற்றினார்.அன்றைய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியின் கோரிக்கையை ஏற்று, 24 மாநிலங்களில், 200 பால் பண்ணை தொழிற்கூடங்கள், 12,000 கிராம கூட்டுறவு சங்கங்கள், 1 கோடி உறுப்பினர்களுடன், தினமும் 2 லட்சம் கோடி லிட்டர் தயாரித்து,பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற செய்தார். தன் 90வது வயதில், 2012, செப்டம்பர் 9ல் மறைந்தார்.'வெண்மை புரட்சி' நாயகர் பிறந்த தினம் இன்று!