மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
அக்டோபர் 27, 1964 புதுச்சேரியில், மருதமுத்து - பால சுந்தராம்பாள் தம்பதியின் மகனாக, 1964ல், இதே நாளில் பிறந்தவர் ரமேஷ் பிரேதன். இவர், கலவை என்ற நகரில் உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், 'அலயன்ஸ் பிரான்சே' என்ற கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு டிப்ளமாவும் முடித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், எம்.ஏ., முடித்து, காந்திய சமூக இயக்கத்தில் ஆசிரியர்; பதிப்பகம் ஒன்றில் கிளை மேலாளர்; 'ஆரோவில்' சர்வதேச நகரின், மைய நுாலகத்தில் நுாலகர்; சென்னை ஆவண காப்பக பணியாளர் உள்ளிட்ட பணிகளை செய்தார். பின், பிரேம் என்ற எழுத்தாளருடன் இணைந்து, 'ரமேஷ் பிரேம்' என்ற பெயரில், 21 நுால்களையும், தனியாக எட்டு நுால்களையும் எழுதினார். இவரது, 'லிங்க ரூபினி, பன்றிக்குட்டி' உள்ளிட்ட கவிதை நுால்கள்; 'பெர்னாதா அல்பாவின் இல்லம், ஆதியிலே மாம்சம் இருந்தது' உள்ளிட்ட நாடகங்கள்; 'மகாமுனி, பரதேசி' உள்ளிட்ட புனைவுகள்; 'இளையராஜா: இசையின் தத்துவமும், அழகியலும்' என்ற ஆய்வு நுால் உள்ளிட்டவை புகழ் பெற்றவை. ' அமீபா' என்ற இலக்கிய இதழ், 'கதை சொல்லி' என்ற , இலக்கிய நாட்டுப்புறவியல் இதழ் போன்றவற்றை நடத்தினார். கம்பன் புகழ் இலக்கிய விருது, எழுத்தாளர் சுஜாதா விருது, களம் புதிது விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்டவற்றை பெற்ற இவர், தன், 60வது வயதில், 2025, செப்டம்பர் 27ல் மறைந்தார். சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான, இவரது பிறந்த தினம் இன்று!
21-Oct-2025