மேலும் செய்திகள்
நரியின் ஊளை புரியாதவர்களா தமிழர்கள்?
25-May-2026
மே 27, 1761 ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில், அலெக்சாண்டர் - மார்கரெட் ஸ்டார்க் தம்பதியின் மகனாக, 1761ல் இதே நாளில் பிறந்தவர் தாமஸ் மன்றோ. பட்டப்படிப்பை முடித்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னையில் காலாட்படையில் சேர்ந்து, அதிகாரியாக உயர்ந்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் பணியாற்றியபோது, நில உரிமையாளர்களிடம் இருந்து, இடைத்தரகர்கள், ஜமீன்தார்கள் அதிக வரியை பெற்று, அரசுக்கு செலுத்தியதை அறிந்து, நேரடியாக நில உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க, 'ரயத்' வரி முறையை அறிமுகம் செய்தார். கடந்த 1820ல் சென்னை மாகாண கவர்னரான இவர், நீதித்துறை, காவல் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். கர்நாடக மாநிலத்தில் மந்த்ராலயத்துக்கு வரி விதித்தார். பின், தன் கனவில் ராகவேந்திரர் வந்ததாகவும், அவரின் தீட்சை கிடைத்ததாகவும் கூறி, வரியை ரத்து செய்தார். கனிவுடன் நடந்ததால், மக்கள் இவரை, 'மந்தரப்ப சாமி' என அழைத்தனர். ஆந்திர மாநிலத்தில் பணியாற்றிய போது, காலராவால் பாதிக்கப்பட்டு, தன் 65வது வயதில், 1827, ஜூலை 6ல் மறைந்தார். சென்னை தீவுத்திடலுக்கு அருகில் சிலையாக உள்ளவரது பிறந்த தினம் இன்று!
25-May-2026