உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / 5,000 கோடி போச்சே சொக்கா!

5,000 கோடி போச்சே சொக்கா!

தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க., மாணவரணி செயலருமான எழிலரசன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறுகையில், 'மத்திய அரசிடம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை கேட்டால், வழங்க வேண்டும். நிதியை தராமல் மறுத்துவிட்டு, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதியை தருவோம் என, மத்திய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்கும் என்ற கொள்கையை தொடர் போராட்டக் களத்தில் உறுதிப்படுத்த உள்ளோம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தமிழகத்திற்கு வர வேண்டிய 5,000 கோடி ரூபாய் போச்சே சொக்கா...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
மார் 12, 2025 15:54

"மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதி" அப்படீன்னு உண்மையாலுமே சட்டப்படி இருந்தா மாநில அரசு அந்த சரத்தை மேற்கோள்காட்டி அதிகாரமாக உரிமையோடு கேட்கலாமே? கல்வி பொதுப்பட்டியல்ல தானே இருக்கு? யார் யார் என்னென்ன செய்யணும்ங்கறத வரையறை செஞ்சிருப்பாங்கள்ல? இதை தெளிவு படுத்தறது சாதாரண விஷயம்தானே? தீமுகா காரனுக்குத்தான் படிப்பறிவு இல்ல செய்யமாட்டேங்கறான்னா ஏன் பிஜேபி காரங்க செய்யக்கூடாது? இதபோயி மீண்டும் மீண்டும் பேசி அவுங்க நேரம் மற்றும் பொதுமக்கள் நேரத்தையும் வீணடிக்கிறானுங்களே?


D.Ambujavalli
மார் 12, 2025 05:44

மத்திய அரசுடன் மோதுவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள்தான் மறுக்கப்படுகிறது இவர்களுக்கென்ன, இந்த 5000 கோடியை டாஸ்மாக் underground டீலிலேயே பார்த்துவிடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை