| ADDED : அக் 03, 2025 10:01 PM
சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. இதில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது, 'காணொளி காட்சி மூலம் துணை முதல்வர் உதயநிதி, இத்திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியை பார்த்தோம். அதில் அவர் பேசும்போது, மகளிர் அனைவரும் மதிய நேர பசியில் இருப்பீர்கள் என்பதால் விரைந்து பேசி முடிப்பதாக தெரிவித்தார். 'அதேபோன்று, இந்த விழாவிற்கு வரவேண்டும் என்பதற்காக, நான், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மதிய உணவு சாப்பிடாமல் வந்து விட்டோம். ஆனால், எங்கள் கட்சியின் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசியிடம் கேட்டபோது, ஒரு நிகழ்ச்சியில் கறி விருந்து சாப்பிட்டு வந்தேன்னு சொல்கிறார்...' என்றார். இதை கேட்டதும் ஒரு பெண், 'பட்டினியா வந்தவரிடம் போய் கறி விருந்து சாப்பிட்டேன்னு சொல்லலாமா...?' என, முணுமுணுக்க, சக பெண்கள் சிரித்தனர்.