உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஆயிரம் ரூபாய்ல சமாளிக்க முடியுமா?

ஆயிரம் ரூபாய்ல சமாளிக்க முடியுமா?

சென்னை, திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மணலியில் நடந்தது. தி.மு.க., கொள்கை பரப்பு செயலரும், தமிழ்நாடு பாடநுால் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி பங்கேற்றார்.லியோனி பேசுகையில், 'அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில், மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமித்து விசாரித்து, 57 நாட்களில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்தது தி.மு.க., அரசு. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுப்பதால், அவர்கள் குடும்ப செலவுகளை பார்த்து கொள்கின்றனர். ஆண்களுக்கு கொடுத்திருந்தால், அது டாஸ்மாக் சென்றிருக்கும்' என்றார்.இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இன்னைக்கு விற்கிற விலைவாசியில, 1,000 ரூபாய்ல குடும்ப செலவை சமாளிக்க முடியுமா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 18, 2025 18:36

பெண்களுக்குக் கொடுக்கப்படும் அந்த 1000 மட்டும் கணவர்களால் பறிக்கப்பட்டு Tasmac குக்குத்தானே போகும் எப்படியும் அந்த வருமானம் தடைப்படாது


Anantharaman Srinivasan
ஜூன் 18, 2025 14:28

டாஸ்மார்க்கை மூடினால் குடும்ப செலவுக்கு குடிகாரஆண்கள் பணம் கிடைக்கும். ஆயிரம் ரூபாயே ஆளும்கட்சி ஒட்டுக்காக தருகிறது. மொத்த குடும்ப செலவையும் அரசே கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை