உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இப்படி விளக்கம் தர முடியுமா?

இப்படி விளக்கம் தர முடியுமா?

புதுச்சேரியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க.,வில், கூடுதலாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கவனம் செலுத்துவதற்காக இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்வியாளர் அணி என்பது ஒரு புதிய முயற்சி. வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.'தமிழக அரசு கல்வி தரத்தை மேம்படுத்தவும், கல்வி தொடர்பான கொள்கைகளை வரையறை செய்யவும், கல்வியில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தில் தமிழகத்தை சேர்ப்பதிலும், தி.மு.க., சிறப்பு கவனம் செலுத்துவதே இதன் நோக்கம்...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., செய்தி தொடர்பாளரால கூட இப்படி விளக்கம் தர முடியுமான்னு தெரியலப்பா...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 14, 2025 18:44

கல்வியாளர்கள், படித்தவர்கள் அணி மட்டும் அமைத்துவிட்டு அவர்கள் அறிவுறுத்துவது மட்டும் ஏற்கப்படாமல் தூக்கி மூலையில் போட்டுவிடுவார்கள் அவர்களும் வாயைத் திறக்காமல் ஒப்புக்கு சப்பாணியாக இருந்துவிட்டுப் போவார்கள்...


நிக்கோல்தாம்சன்
ஜூன் 14, 2025 08:11

அப்படியே இந்த அணிகளையும் பரிசீலியுங்க படிக்கும் காலத்தில் படிக்காமல் பெண்கள் சுற்றியவர்கள் அணி என்றும் உருவாக்கலாம் , சேர் தூக்கிகள் அணி , சொம்பு தூக்கிகள் அணி , விளக்கு பிடிப்போர் அணி , மதவியாபாரிகள் அணி


புதிய வீடியோ