உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இவர் படம் பார்த்தாரா, இல்லையா?

 இவர் படம் பார்த்தாரா, இல்லையா?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், சமீபத்தில் திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் அடுத்து வரும் உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், த.வெ.க.,வுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். 'முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பார்த்து, சில அமைச்சர்கள் அழுததை குற்றச்சாட்டாக சிலர் கூறுகின்றனர். சில படங்களை பார்க்கும் போது, அதில் வரும் காட்சிகளால், பலருக்கு கண்ணீர் வரலாம். அதில் என்ன தப்பு? சினிமா பார்க்கும் எத்தனையோ பேர் அழுவதை, நான் பார்த்துள்ளேன். அது, அவர்களின் உணர்ச்சி. அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'அமைச்சர்கள் அழுதது இருக்கட்டும்... ஜனநாயகன் படத்தை இவர் பார்த்தாரா, இல்லையான்னு சொல்ல மாட்டேங்கிறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஆக 01, 2026 19:26

சிலர் சினிமா படத்தின் கதை நடிக நடிகையரின் நடிப்பில் ஒன்றிப்போய் உணர்ச்சிபெருக்கால் அழுவதுண்டு. காதர் மொய்தீன் ஜனநாயகன் படம் பார்த்தழுத மந்திரிகளை பார்த்தே உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிடுவார் போலிருக்கு.. இது கூட்டணிக்கு அச்சாரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை