உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / துாத்துக்குடி பக்கமே வராது!

துாத்துக்குடி பக்கமே வராது!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, துாத்துக்குடியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'துாத்துக்குடியில் சமீபத்தில் துவங்கப்பட்ட வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை போன்ற நிறுவனங்களில் கடினமான, அடித்தட்டு வேலைகளுக்கு மட்டுமே உள்ளூர் மக்களை பயன்படுத்துகின்றனர். அதிகாரம் மிக்க பணிகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 'துாத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக துவங்கப்படும் தொழிற்சாலைகள், ஏற்கனவே துவங்கிய தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்...' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அப்படி எல்லாம் சட்டம் போட்டா, எந்த தொழிற்சாலையும் துாத்துக்குடி பக்கமே வராது...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடி கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Muthukumaran
செப் 27, 2025 17:55

சுதேசி இயக்கத்துக்கு மோடி யா வீடா இட்ரம்ப் அதிகம் பாடுபடுகிறர் கிருஷ்ணஸ்வாமி. தூத்துக்குடியில் துவங்கி இருக்கிறார்.


D.Ambujavalli
செப் 20, 2025 18:47

எந்தத் தொழிற்சாலையும் ஆரம்பிக்க ஏழை பாழைகளின் நிலம், வீடு என்று மலிவாக கையகப்படுத்தும்போது ‘வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு’ என்பார்கள் ஆனால் whote collar வேலைகளெல்லாம் தங்கள் கூட்டம், சொந்த பந்தங்களுக்குள்ளேயே முடித்துக்கொண்டு மூட்டை தூக்க, மெஷின் க்ளீன் செய்ய என்று தினக்கூலியில் அமர்த்தி ஏமாற்றுவார்கள் எந்த அரசும் இதற்கெல்லாம் சட்டம் போடாது அது முதலாளி, தொழிலாளிகளுக்குள் விவகாரம் என்று ஒதுங்கிவிடும்


vbs manian
செப் 20, 2025 12:54

தூத்து குடியை ஊத்தி மூடிவிட்டார்கள்.


சமீபத்திய செய்தி