வாசகர்கள் கருத்துகள் ( 1 )
‘அந்த’ camp இல் இன்னோவா கிடைத்தது இங்கு அதைவிட பல மடங்கு கிடைத்திருக்கும் போல அதுதான் ஜால்ராவை ஓங்கி ஓங்கித் தட்டுகிறார்
மேலும் செய்திகள்
முடிவுக்கு வருவது எப்போது?
11-Jun-2025
தமிழியக்க அமைப்பு செயலரான மறைந்த வணங்காமுடி படத்திறப்பு விழா, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், முத்தமிழ் மன்றம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் நடந்தது. வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை வகித்து, வணங்காமுடி படத்தை திறந்து வைத்தார்.இதில் பங்கேற்ற, தி.மு.க., ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வை அகற்றுவோம் என சொன்னவர்களை காலமே விழுங்கியிருக்கிறது. தி.மு.க., என்பது கட்சியல்ல; இயக்கம். கும்பல் அரசியல் நடத்துகிற கட்சியல்ல; கொள்கை அரசியல் நடத்துகிற கட்சி. இதை அழிப்பதற்கு ராணுவத்தாலேயே முடியாது; அமித் ஷாவால் எப்படி முடியும்?' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வை அழிக்க ராணுவம் எல்லாம் தேவையில்லை... இந்த மாதிரி ஆணவப்பேச்சே போதும்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
‘அந்த’ camp இல் இன்னோவா கிடைத்தது இங்கு அதைவிட பல மடங்கு கிடைத்திருக்கும் போல அதுதான் ஜால்ராவை ஓங்கி ஓங்கித் தட்டுகிறார்
11-Jun-2025