வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதே திராவிட நாடகம் ...... ஆனா சொல்லிக்கிறது வித்தியாசமான கட்சி ......
சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் உள்ள மாணவியர் விடுதிக்கு, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் ஆய்வுக்கு சென்றார். மாணவியருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர், விடுதியில் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஆனால், மாணவியருக்கு சமைக்கப்பட்ட உணவை சாப்பிடாமல், தனக்கு தனியாக எடுத்து வந்த பிரட்டில், வெண்ணெய், ஜாம் தடவி சாப்பிட்டார். அவர் அருகில் அமர்ந்திருந்த மாணவியர், விடுதியில் சமைக்கப்பட்ட இட்லியை சாப்பிட்டனர். அமைச்சர், விடுதி உணவை சாப்பிடாதது, மாணவியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 'இந்த பிரட்டையும், ஜாமையும் அமைச்சர் வீட்டுலயே சாப்பிட்டுட்டு வந்திருக்கலாமே... இங்க வந்து ஏன் சாப்பிடணும்...?' என ஒரு மாணவி முணுமுணுக்க, சக மாணவியர் ஆமோதித்தனர்.
அதே திராவிட நாடகம் ...... ஆனா சொல்லிக்கிறது வித்தியாசமான கட்சி ......