உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  சாமி கும்பிடுறதிலும் போட்டியா?

 சாமி கும்பிடுறதிலும் போட்டியா?

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், த.வெ.க., தலைவர் விஜய், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வேல் ஏந்தி வந்து, வழிபாடு நடத்தி சென்றார். மறுநாளே, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர், திடீரென திருச்செந்துார் கோவிலுக்கு வந்தனர். அமைச்சர்கள் இருவருக்கும், கிட்டத்தட்ட 5 அடி உயரம் கொண்ட வேலை, கோவில் நிர்வாகிகள் வழங்கினர். முதல் நாள், விஜய் கையில் வேல் ஏந்தியபடி முருகனை தரிசனம் செய்த நிலையில், அதே வழியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வேல் ஏந்தியபடி முருகனை தரிசனம் செய்தனர். இதை பார்த்த பக்தர்கள் சிலர், 'தேர்தல்ல தான் விஜய்க்கு போட்டியா இருந்தாங்கன்னு பார்த்தா, சாமி கும்பிடுறதுலயும் போட்டி போடுறாங்களே...' என முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை