வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கவுன்சிலரின் கணவர் ஒப்பந்தக்காரர் என்றாலே வேலையின் தரம் பற்றி யாரும் கேட்கப்போவதில்லை என்பது தெளிவாகிறது
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 12வது வார்டில், மழை நீர் வடிகால்களை புனரமைக்கும் பணியை, தி.மு.க.,வின் மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். அப்போது, 'இந்த வேலையை யார் செய்றாங்க' என, அங்கிருந்த அதிகாரி களிடம் கேட்டார். அதற்கு, அந்த வார்டு கவுன்சிலரின் கணவர் செய்வதாக கூறி, அவரை கைகாட்டினர். அவரிடம், 'கவுன்சிலர்கள் தரப்பே வேலைகளை எடுத்து செய்யும் போது, கணக்கு பார்க்காம, நல்லா செலவு பண்ணி வேலை செய்ய வேண்டும். அப்போ தான் மக்களிடம் ஓட்டு வாங்க முடியும்' என, 'அட்வைஸ்' செய்தார். அப்பகுதியில் நின்றிருந்த ஒருவர், 'எந்த அரசு பதவி யிலும் இல்லாம, கட்சி பதவியில மட்டும் இருக்கும் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரருக்கு அறிவுரை சொல்றாரே...' என கூற, அருகில் இருந்தவர், 'தி.மு.க., ஆட்சியில் இதெல் லாம் சர்வ சாதாரணமப்பா...' என்றபடியே நடந் தார்.
கவுன்சிலரின் கணவர் ஒப்பந்தக்காரர் என்றாலே வேலையின் தரம் பற்றி யாரும் கேட்கப்போவதில்லை என்பது தெளிவாகிறது