உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பொன்முடியை நீக்குவதே நல்லது!

பொன்முடியை நீக்குவதே நல்லது!

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் சனாதன கொள்கையின் அடிப்படை, மக்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்துவது தான். இதை தான் துணை முதல்வர் உதயநிதி விமர்சித்தார். சனாதனம், இந்திய அரசியல் அமைப்பல்ல. இந்திய அரசியல் அமைப்பு சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. ஆனால், இதை மத்திய அரசும், கவர்னரும் ஏற்க மறுக்கின்றனர்.'அமைச்சர் பொன்முடியின் ஹிந்து விரோத பேச்சுக்கு பின், அது தொடர்பாக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார்; அவரது பேச்சில் யாருக்கும் உடன்பாடில்லை. மற்றபடி, நாட்டுக்கு நன்மை பயக்காதவற்றை, மீண்டும் மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மத்திற்கு உகந்தது அல்ல' என்றார், பத்திரிகையாளர்களை பார்த்த படி.மூத்த நிருபர் ஒருவர், 'பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தான், நாட்டுக்கு நன்மை பயக்கும் செயலாக இருக்கும்...' என, முணுமுணுத்தார். அதை அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கண்ணன்
ஏப் 28, 2025 10:43

அப்போ இவர் இருக்கும் மதம் எப்படிப் பட்டதாம்? அங்கு சாதிப் பிரிவினை இல்லையா?


Dharmavaan
ஏப் 28, 2025 09:39

உதய நிதியை சும்மா விட்டது கேவலமான நீதி.. திமுகவிற்கு நீதிக்கும் உள்ள புரிதல் தீர்ப்பு எல்லாம் திமுகவுக்கு சாதகமாக.மோடி நீதிக்கு எதிராக சாட்டையை எடுக்க வேண்டும்.. வரம்பு மீறுகிறது நீதி


D.Ambujavalli
ஏப் 28, 2025 06:41

பெரிய குற்றங்கள் நிகழ்ந்தால் ‘கட்சியை விட்டு நீக்கி ‘ மனு நீதி காப்பாராம் முகம் சுளிக்குமளவு பெண்களின் ஒரு வகுப்பினரையும், மத சின்னங்களையும் கேவலமாகப் பேசினவரை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி நீதி பரிபாலனம் செய்வாராம் கோர்ட்டும், மக்களும் இடித்த இடி தாங்காமல் தானே முன்வந்து அமைச்சர் பதவியைப் பறிக்காமல் பெருந்தன்மையாக அவர் ராஜினாமா செய்தது போல ஒரு நாடகம் இதை வேறு பெரிய நீதிமானாக முதல்வரை தூக்கிப் பிடிக்கிறார்


நிக்கோல்தாம்சன்
ஏப் 28, 2025 03:47

திமுகவின் கூற்றுப்படி சமத்துவம் என்பது ஒரு மதத்தினருக்கு மாத்திரமே உரித்தானது அந்த வெளிநாட்டு மதம் பற்றி அதன் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி இவனுக்கு ஏதாவது தெரியுமா ? இல்லை முன்னால் திமுக அயலக அணி தலைவர் கொடுத்த வஸ்துவை இவனும் பயன்படுத்துறானா ?


Anantharaman Srinivasan
ஏப் 28, 2025 01:05

பொன்முடி மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டாரா..? பொன்முடி பேச்சுக்கு ஊரெல்லாம் காறி துப்பபிய பிறகு, நீதிமன்றம் வசை பாடி கண்டித்த பிறகு வேறு வழியின்றி செய்த ராஜினாமா.. ஸ்டாலின்க்கு credit தர வெட்கமாயில்லையா..?.


சமீபத்திய செய்தி