உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இப்ப இருக்கறதும் தேராது!

 இப்ப இருக்கறதும் தேராது!

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்துாரில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இந்த தேர்தலில் ஒரு மாயாஜால அலை அடித்து எதிரணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் தோற்றதற்கான காரணங்கள் குறித்து அலசி ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக குழு ஏற்பாடு செய்திருக்கிறோம். 'பஸ்சில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என, முதல்வர் விஜய் வாக்குறுதி கொடுத்தார்; அது நிறைவேற்றப்பட்டதா? கொடுத்த வாக்குறுதிகள் எதையும் விஜய் நிறைவேற்றவில்லை. அதனால், இந்த நிலை மாறும். இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் புதிய தெம்புடன் தேர்தலை எதிர்கொள்வோம்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ஆறு மாசத்தில் தேர்தல் நடந்தால், விஜய் கட்சி 200 தொகுதிகளுக்கு மேல ஜெயிச்சிடும்... இவங்களுக்கு இப்ப இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கூட தேர மாட்டாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 22, 2026 08:29

அதாவது, பதவியேற்ற 10ஆம் நாளே ‘வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ பல்லவியைக் கையில் எடுக்கும் நீங்கள், ஐந்து வருஷத்திலும் நிறைவேற்றா தவற்றுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? மக்களே பதிலைக்கூறி மூலையில் உட்கார்த்திவிட்டார்கள் போதாதா?


புதிய வீடியோ