வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ‘இடைச் செருகலால் ‘ தேர்தலில் வென்று வந்தால் என்னென்ன கோரிக்கைகள் ezhu ஓ? தாலிக்குத் தங்கம் வாக்குறுதி நம்ம அஜெண்டாவிலேயே இல்லையே ‘ என்றார் அதிர்ச்சி அடைந்திருப்பார் தலைவர்
தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எதிரே சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'தி.மு.க., ஆட்சியில், மின் கட்டணம், வீட்டு வரியை பல மடங்கு உயர்த்திட்டாங்க. விலைவாசி உயர்ந்து விட்டதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்' என்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், 'ஆமாம்... தங்கம் விலை சவரன், 1 லட்சம் ரூபாயை தாண்டி போயிடுச்சே... இனிமே தங்கமே வாங்க முடியாது போலிருக்கே...' என, முணுமுணுத்தார். அருகிலிருந்த பெண்ணோ, 'அதனால தானே, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்திடுச்சு... நம்ம ஆட்சி வந்ததும், பழனிசாமி முதல்வராகி, மறுபடியும் தாலிக்கு தங்கம் தருவார்... நம்ம பெண்களை கரையேத்திடலாம்...' எனக் கூற, சக பெண்கள் ஆமோதித்தனர்.
இந்த ‘இடைச் செருகலால் ‘ தேர்தலில் வென்று வந்தால் என்னென்ன கோரிக்கைகள் ezhu ஓ? தாலிக்குத் தங்கம் வாக்குறுதி நம்ம அஜெண்டாவிலேயே இல்லையே ‘ என்றார் அதிர்ச்சி அடைந்திருப்பார் தலைவர்