உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பாசம் பொங்கி வழியுது!

பாசம் பொங்கி வழியுது!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், தமிழக அரசின், 'நலன் காக்கும் ஸ்டாலின்' என்ற மருத்துவ முகாம் நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். உடன், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., ராஜேந்திரனும் இருந்தார். இருவரும் முகாமை பார்வையிட்டனர். அப்போது, இதயம் தொடர்பான பிரச்னைக்கு, டாக்டரிடம் ஒருவர் ஆலோசனை கேட்டு கொண்டிருந்தார். அவரிடம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், 'ஐயா... இங்க சரியாகவில்லை என்றால், என் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்குங்க...' என்றார், கனிவுடன். அமைச்சர் சுப்பிரமணியன், 'தன் மருத்துவமனைக்கு பேஷன்ட் சேர்க்கிறாரே...' எனக்கூறி சிரித்தார். உடனே ராஜேந்திரன், 'என் தொகுதி மக்களை நான் தானே பாதுகாக்கணும்...' என சமாளித்தார். இதைக்கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தல் வருதுல்ல... அதான், தொகுதி மக்கள் மீது எம்.எல்.ஏ.,வுக்கு பாசம் பொங்கி வழியுது...' எனக்கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை