உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கொடுத்துட்டு தான் மறுவேலை!

கொடுத்துட்டு தான் மறுவேலை!

மதுரை, அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், மா.கம்யூ., கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின் சண்முகம் அளித்த பேட்டியில், 'தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், விவசாயிகளுக்காக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்ற அக்கறை, எங்களை விட ஆளுங்கட்சிக்கு தான் அதிகம் இருக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் நீடித்தாலும், எப்போதும் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ பங்கு கேட்க மாட்டோம்...' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆமா... இவங்க கேட்டுட்டாலும், தி.மு.க.,வினர் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஆக 17, 2025 05:57

இரண்டு சீட் உடன் ₹ தேவை


D.Ambujavalli
ஆக 16, 2025 17:04

இவர்களால் ஒரு இரண்டு சீட் ஜெயித்து மூலையில் உட்கார மட்டுமே முடியும் இதில் இவர்கள் அழுத்தம் கொடுப்பார்களாம், முதல்வர் செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாராம் நம்பிடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை