உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பெட்ரோல் செலவும் மிச்சம் தானே!

 பெட்ரோல் செலவும் மிச்சம் தானே!

சென்னை, திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., சார்பில், 'மாஜி' எம்.எல்.ஏ., குப்பன், கவுன்சிலர் கார்த்திக் தலைமையில், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் பொறுப்பாளரான, தாம்பரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சின்னையா பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் சின்னையா, மீட்டிங் நடந்த ஹாலில் இருந்து வெளியேறி, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார். உடன் கட்சியினரும் பெரும்படையாக சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த கட்சிக்காரர் ஒருவர், 'முன்னாள் அமைச்சர் ஏன் நடந்து போறாரு...?' என கேட்டார். உடனிருந்த மற் றொருவர், 'அது ஒண்ணுமில்லப்பா... இங்கிருந்து தாம்பரத் துக்கு கார்ல போகணும்னா, ஒன்றரை மணி நேரம் ஆகிடும்... அதனால, மெட்ரோ ரயில்ல ஏர்போர்ட் வரைக்கும் போய், அங்கிருந்து கார்ல தாம்பரம் போயிடுவார்' எனக் கூற, கேள்வி கேட்டவர், 'அது சரி... காருக்கு பெட்ரோல் செலவும் மிச்சம் தானே...' என்றபடியே, நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 27, 2025 06:14

சொந்தக்காசில் பெட்ரோல் போட வேண்டுமென்றால் எத்தனை சிக்கனமாக இருக்கிறார் இதே தேர்தலில் வென்று பதவியில் இருந்த காலத்தில் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா?


சமீபத்திய செய்தி