வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் கலைஞர் காட்டிய ‘breakfast to lunch ‘ வழிதான் எல்லாவற்றுக்கும் முன்னோடி திமுகதான்
தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், 108 இடங்களில் வெற்றி பெற்றது. '118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதங்களை காட்டினால் தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும்' என, கவர்னர் அர்லேகர் கூறி னார். இதனால், நான்கைந்து நாட்களாக விஜய் ஆட்சியமைக்க முடியாமல் இழுபறி ஏற்பட்டது.விஜயை ஆட்சி அமைக்க விடாமல் கவர்னரும் பா.ஜ.,வும் சூழ்ச்சி செய்வதாக குற்றஞ்சாட்டி, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், சமீபத்தில் த.வெ.க.,வினர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கோட்டக்குப்பம் போலீசார் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, மதியம் 1:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'சரியா மதியம் சாப்பாட்டு நேரமா பார்த்து உண்ணாவிரதத்தை முடிச்சுட்டாங்களே... இவங்க புத்திசாலிகள் தான்' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
எல்லாம் கலைஞர் காட்டிய ‘breakfast to lunch ‘ வழிதான் எல்லாவற்றுக்கும் முன்னோடி திமுகதான்