உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஒதுங்குவதே பெரிய ஒத்துழைப்பு!

 ஒதுங்குவதே பெரிய ஒத்துழைப்பு!

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், 'தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கேட்கப்படும், என உதயநிதி கூறியுள்ளாரே... முதியவர்கள் ஒதுங்கி கொண்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா?' என கேட்டார். அதற்கு பதிலளித்த முத்துசாமி, 'வாய்ப்பு தருவதை கட்சி தலைமை முடிவு செய்யும். இளைஞர்கள் அதிக வாய்ப்பு கேட்பதில், எந்த தப்பும் இல்லை. குடும்பத்தில் ஒருவர் மேஜரானால், சில பொறுப்புகளை அவருக்கு வழங்குவதில்லையா. 'அதுபோல, சில தொகுதிகளில் இளைஞர்கள் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தால், அவர்களுக்கு மூத்தவர்களும் ஒத்துழைப்பு கொடுப்பர்' என்றார். பேட்டி முடிந்ததும், 'மூத்தவர்கள் ஓரமா ஒதுங்கியிருப்பதே, பெரிய ஒத்துழைப்பா இருக்கும்னு உதயநிதி ஆதரவாளர்கள் சொல்லிடுவாங்கப்பா...' என, ஒரு நிருபர், 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 11, 2026 12:42

கட்சி முதியவர்கள் ஒதுங்கிக்கொண்டு இளைஞர்களுக்கு இடம் கொடுங்க என்றால் கருணாநிதி குடும்பம் தவிர்த்து என்று பொருள் கொள்ள வேண்டும்...


D.Ambujavalli
ஜன 11, 2026 06:24

மூத்தவர்கள் கொள்ளையடித்து மூட்டை கட்டிக்கொண்டிருந்தால் இளையவர்கள் என்ன ஏமாளிகளா? என்று இவர்கள் பங்குக்கு இன்னும் விதவிதமாகக் கொள்ளையடிக்கப் போகிறார்கள் மற்றபடி என்ன பெரிய புதுமையைப் புகுத்திவிடப் போகிறார்கள்?


சமீபத்திய செய்தி